5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ganesh Chaturthi: தொடரும் விநாயகர் சதுர்த்தி சோகம்.. பெட்ரோல் ஊற்றி ஒருவர் எரித்துக்கொலை!

திட்டப்படி முதலில் தன்னிடம் இருந்த தண்ணீரை சந்திரயா மீது சூரியகுமார் ஊற்றியுள்ளார். இதனால் கோபமான சந்திரயா வாக்குவாதம் செய்ய இரண்டு பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சூரியகுமார் மற்றொரு பாட்டிலில் இருந்த பெட்ரோலை சந்திரயா மீது ஊற்றி தீவைத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் அலறி துடித்தபடி சம்பவ இடத்திலேயே உடல் கருகினார்.

Ganesh Chaturthi: தொடரும் விநாயகர் சதுர்த்தி சோகம்.. பெட்ரோல் ஊற்றி ஒருவர் எரித்துக்கொலை!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 13 Sep 2024 10:11 AM

விநாயகர் சதுர்த்தி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் குடிபோதையில் ஆட்டம் போட்ட நபர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமான் சிலைகளை ஆங்காங்கே வீதிகளில் வைத்து வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து அந்த சிலைகள் ஒரே நேரத்தில் தொடர்ந்து ஒருவாரமாக  நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நடைபெற்ற பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

அம்மாவட்டத்தில் உள்ள கே.வி.பி.புரம் மண்டலம் கர்லபுடியில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி அப்பகுதி மக்கள் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டனர். அந்த நிகழ்ச்சியின் போது அந்த கிராமத்தைச் சேர்ந்த சந்திரயா என்பவரும், சில வாலிபர்களும் சேர்ந்து ஆடி பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அப்போது சந்திரயா குடிபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சூரியகுமார் என்ற இளைஞர் அவரை பழிவாங்க முடிவு செய்துள்ளார். அதன்படி பெட்ரோல் நிரப்பப்பட்ட ஒரு பாட்டிலையும், தண்ணீர் நிரப்பப்பட்ட பாட்டிலையும் தனது கைகளில் வைத்திருந்தார்.

Also Read: Sivagangai: கொட்டகையில் பிடித்த தீ.. குன்றக்குடி கோயில் யானை உயிரிழப்பு!

திட்டப்படி முதலில் தன்னிடம் இருந்த தண்ணீரை சந்திரயா மீது சூரியகுமார் ஊற்றியுள்ளார். இதனால் கோபமான சந்திரயா வாக்குவாதம் செய்ய இரண்டு பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சூரியகுமார் மற்றொரு பாட்டிலில் இருந்த பெட்ரோலை சந்திரயா மீது ஊற்றி தீவைத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் அலறி துடித்தபடி சம்பவ இடத்திலேயே உடல் கருகினார்.

இந்த சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சந்திரயாவை மீட்டு அருகில் உள்ள திருப்பதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சந்திரயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சூரியகுமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் 2

இதனிடையே நாடு முழுவதும் விநாயகர் செய்து விழாவில் வைக்கப்பட்ட சிலைகளை கரைக்க சென்ற போது நீர்நிலைகளில் மூழ்கி பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை சிலர் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக எடுத்துச் சென்றனர். அப்போது சிலையை ஆற்றில் கரைக்கும் போது திடீரென ஏழு பேர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதில் 2 ஆண்களும், ஒரு பெண்ணும் அங்கு நின்றவர்களால் உடனடியாக மீட்கப்பட்டனர்.

ஆனால் ஒரு பெண், அவரின் 2 மகன்கள் மற்றும் அந்த பெண்ணின் சகோதரர் ஆகிய 4 பெரும் காணாமல் போயினர். இந்த நிலையில் நேற்று அதிகாலை அவர்கள் நான்கு பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: Lunar Eclipse 2024: சந்திர கிரகணத்தால் 6 ராசிகளுக்கு காத்திருக்கும் நற்பலன்கள்..!

சம்பவம் 3

இப்படியான நிலையில் அதே திருப்பதி பகுதியை ஒட்டியுள்ள சப்தகிரி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த முறை விநாயகர் சதுர்த்தி திருவிழா வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக விழா ஏற்பாட்டாளர்கள் வித்தியாசமான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றனர். அந்த வகையில் நடைபெற்ற டான்ஸ் நிகழ்ச்சியில் விநாயகர் சிலை முன்பு இளம் பெண்களும் இளைஞர்களும் ஆபாசமாக நடனமாடியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி சர்ச்சையானது. இதனையடுத்து ஊர் பொதுமக்கள் போலீசில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பட்டாளர்கள் மீது புகார் அளித்தனர். இந்த புகார் அடிப்படையில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். பக்தி என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றாலும் இது போன்ற பண்டிகைகளின் போது கடவுள் மீதான நம்பிக்கை எனக் கூறி சில செய்யும் செயல்கள் மிகப்பெரிய அளவில் மற்றவர்களுக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது என இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Latest News