5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Traffic Diversion: சென்னை கத்திப்பாரா பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. எப்படி செல்ல வேண்டும் ? நோட் பண்ணுங்க மக்களே..!

இன்று பெரும்பாலான மக்கள் மெட்ரோ ரயில் பயணத்தையே நம்பியுள்ளனர். சென்னையில் பச்சை வழித்தடம், நீல வழித்தடம் என இரண்டு வழித்தடங்கள் செயல்பாட்டில் உள்ளது. மேலும் இந்த வழித்தடங்களை விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழிப்பாட்டு தளங்கள் விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னையில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Chennai Traffic Diversion: சென்னை கத்திப்பாரா பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. எப்படி செல்ல வேண்டும் ? நோட் பண்ணுங்க மக்களே..!
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 10 Oct 2024 12:51 PM

சென்னை மெட்ரோ ரயில் பணிகளின் காரணமாக சென்னையில் போக்குவரத்து வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் அதிக கட்டணம் என்பதால் மக்கள் பெரிதும் பயன்படுத்தாத நிலையில், இன்று பெரும்பாலான மக்கள் மெட்ரோ ரயில் பயணத்தையே நம்பியுள்ளனர். சென்னையில் பச்சை வழித்தடம், நீல வழித்தடம் என இரண்டு வழித்தடங்கள் செயல்பாட்டில் உள்ளது. மேலும் இந்த வழித்தடங்களை விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழிப்பாட்டு தளங்கள் விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னையில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.


அந்த வகையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக கிண்டி கத்திபாராவில் இருந்து போரூர் செல்லும் வழித்தடத்தில் வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், “ மவுண்ட் பூந்தமல்லி ரோடு ஆர்மி ரோடு சந்திப்பு (புகாரி ஓட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை CMRL பணிகள் மேற்கொள்வதால், கத்திப்பாரா நோக்கி செல்லும் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் செல்ல பரிந்துரைக்கப்பட்டு 11.10.2024 முதல் 14.10.2024 வரை சோதனை அடிப்படையில் செயல் படுத்தப்படும்.

மேலும் படிக்க: ரத்தன் டாடாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு..

கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவை வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலையில் நேராக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அவர்கள் மவுண்ட் பூந்தமல்லி சாலை பெல் இராணுவ சாலை சந்திப்பில் புதியதாக அமைந்துள்ள சாலை வழியாக டிபென்ஸ் காலனி 1-வது அவென்யூவில் (வலதுபுறம் திரும்பி) இலகுரக வாகனங்கள் மட்டும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனை வழியாக பட்ரோடு சென்று அடையலாம்.

மேலும் படிக்க: உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை.. டாடா பங்குகளில் கவனம் செலுத்தும் முதலீட்டாளர்கள்!

மற்ற வாகனங்கள் கண்டோன்மென்ட் சாலையில் இடது புறம் திரும்பி சுந்தர் நகர் 7-வது குறுக்கு தெரு, தனகோட்டி ராஜா தெரு சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தெற்கு பகுதி சாலை வழியாக ஒலிம்பியா 100 அடி சாலை சந்திப்பு அடைந்து வாகனங்கள் கத்திப்பாராவை அடைய வலது புறமாகவும். வடபழனியை அடைய இடது புறமாகவும் தங்கள் இலக்குகளை நோக்கி செல்லலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Latest News