தீபாவளி ஷாப்பிங்.. தி.நகர் போறீங்களா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு! - Tamil News | due to diwali festival 50 special buses operated on weekends from tnagar broadway and other areas in chennai | TV9 Tamil

தீபாவளி ஷாப்பிங்.. தி.நகர் போறீங்களா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இரண்டு நாட்களுக்கு பயணிகள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி ஷாப்பிங்.. தி.நகர் போறீங்களா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

பேருந்துகள்

Published: 

26 Oct 2024 17:21 PM

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைவரும் தயாராகி வருகின்றனர். ஆடைகள், இனிப்புகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்கியும் வருகின்றனர். குறிப்பாக சென்னையில் எந்த பண்டிகை நாட்கள் என்றால் தி.நகரில் மக்கள் கூட்டம் அலைமோதும். பண்டிகை காலங்களில் தி.நகருக்கு சென்று பொருட்களை வாங்குவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும், தீபாவளி பண்டிகைக்கு சொல்லவே வேண்டாம். சென்னை மக்களும் அனைவருமே தி.நகரில் குவிந்து இருப்பார்கள். இதனால் தி.நகர் முழுவதும் பெரும் பரபரப்பாக இருக்கும்.

இரண்டு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்:

தி.நகரில் உள்ள 4 தெருக்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட புறநகரில் இருந்து தி.நகருக்கு மக்கள் வருவார்கள். தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், இன்றும், நாளையும் தீ.நகரில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இதனால் பேருந்துகள், ரயில்களில் மக்கள் கூட்டம் இருக்கும். இந்த நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மக்கள் ஷாப்பிங் சென்று எந்த ஒரு சிரமமும் இல்லாமல் வீடு திரும்புவதற்காக ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Also Read: த.வெ.க மாநாட்டில் ரோடு ஷோ நடத்தப்போகிறாரா விஜய்? காவல்துறை முக்கிய தகவல்!

அதன்படி, இன்றும், நாளையும் வழக்கமாக இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வார இறுதி நாட்களான 26.10.2024 (இன்று) மற்றும் 27.10.2024 ஆகிய இரண்டு நாட்களுக்கு பயணிகள் வசதிக்காக தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை (எம்.சி. ரோடு) ஆகிய இடங்களுக்கு காலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: மதுரையில் பதிவான 11 செ.மீ மழை.. இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

எந்தெந்த வழித்தடங்கள்?

தியாகராய நகர் – திருப்போரூர், வில்லிவாக்கம் – திருவான்மியுர், தியாகராய நகர் – அம்பத்தூர் O.T, தியாகராய நகர் – ஜே.ஜே.நகர் கிழக்கு, ஆவடி – பிராட்வே, பெசன்ட் நகர் – வில்லிவாக்கம், தாம்பரம் – செங்கல்பட்டு, தியாகராய நகர் – தாம்பரம், தியாகராய நகர் – பூந்தமல்லி, பிராட்வே – மணலி, பல்லாவரம் – செங்கல்பட்டு, தாம்பரம் – வேளச்சேரி, தியாகராய நகர் – திருவான்மியூர், தியாகராய நகர் – திருவேற்காடு, பிராட்வே – கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகிய வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தியாகராய நகர் – கூடுவாஞ்சேரி, பிராட்வே – செங்குன்றம் – கிளாம்பாக்கம் – கூடுவாஞ்சேரி, தியாகராய நகர் – செம்மஞ்சேரி – கோயம்பேடு பேருந்து நிலையம் – மயிலாப்பூர், பிராட்வே – கிளாம்பாக்கம் – கே.கே.டி. நகர் – கூடுவாஞ்சேரி – திருவொற்றியூர் – கோயம்பேடு – பிராட்வே, கே.கே.நகர் – அண்ணா சதுக்கம், வள்ளலார் நகர் – பிராட்வே – பூந்தமல்லி – எண்ணூர் – செங்குன்றம், டோல்கேட் – திருவான்மியூர்  ஆகிய வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலில் வைட்டமின் பி12 அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?
காலை வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடுங்கள்.. அற்புதமான பலன் கிடைக்கும்
வாசனை திரவியம் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்னையா?
நூடுல்ஸ் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?