Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. விமான சேவை முதல் பேருந்து சேவைகள் வரை பாதிப்பு..

Weather Report: இன்று மாலை, மாலையில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடிய புயலாக கிட்டத்தட்ட மேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. விமான சேவை முதல் பேருந்து சேவைகள் வரை பாதிப்பு..

விமான ஓடுபாதையில் சூழ்ந்த நீர்

Updated On: 

30 Nov 2024 13:13 PM

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மாலை சென்னை அருகே மாமல்லப்புரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மதியம் உருவான புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடாமல் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இன்று மாலைக்கு மேல் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையில் போக்குவரத்து சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலைய ஓடு பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று மாலை 7 மணி வரை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஃபெஞ்சல் புயல்:

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “ஃபெங்கல்” என்ற சூறாவளி புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று 30 நவம்பர் 2024 காலை 8.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் அட்சரேகைக்கு 12.3°N மற்றும் தீர்க்கரேகை 80.9°E, சுமார் 120 புதுச்சேரிக்கு கிழக்கு-வடகிழக்கே கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ., நாகப்பட்டினத்திலிருந்து 200 கி.மீ. வடக்கு-வடகிழக்கே, திருகோணமலைக்கு வடக்கே 420 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.

மேலும் படிக்க: ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. மீண்டும் பார்க்கிங் ஏரியாவாக மாறிய மேம்பாலங்கள்..

இது நவம்பர் 30-ம் தேதி மாலையில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடிய புயலாக கிட்டத்தட்ட மேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து சேவையில் மாற்றம்:

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்கும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், “ அதிகாலை முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும். ஃபெஞ்சல் (FENGAL) புயல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம். மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:  இனி ஏடிஎம்களில் சிறிய தொகை எளிதாக கிடைக்கும்.. வங்கிகளிக்கு RBI அறிவுரை!

விமான நிலையம் மூடல்:


சென்னையில் நேற்று மாலை முதல் காற்றுடன் கூடிய மழை பதிவாகி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தொடர் கனமழையால் விமான ஓடுப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் பாதுகாப்பு காரணங்கள் கருதி, சென்னை விமான நிலையம் இன்று பிற்பகல் முதல் மாலை 7 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 12.15 மணி முதல் மின்சார ரயில் சேவை ரத்து செய்ய்ப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் வாட்ஸ்அப்பை பாதுகாப்பாக வைத்திருக்க இத பண்ணுங்க!
மழைக்காலத்தில் கீரை காய்கறிகளை அதிகம் சாப்பிடக்கூடாது ஏன்?
ரூ.35,099 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் ஐபோன் 15 ப்ரோ!
இனி சுலபமாக வாய்ஸ் மெசேஜை குறுஞ்செய்தியாக மாற்றலாம்!