Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. மீண்டும் பார்க்கிங் ஏரியாவாக மாறிய மேம்பாலங்கள்..
கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் தேங்கும் மழைநீர் காரணமாக வாகனங்கள் குறிப்பாக கார்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைகிறது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாய் மாறியது. வெள்ளப்பெருக்கின் போது அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் காலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. பொதுவாக சென்னையில் அதிகனமழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வட சென்னை, முடிச்சூர், தாம்பரம், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதிகளின் நிலை மாறாத காரணத்தினால் அங்கு வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் மழைநீர் புகுந்து சேதமடைகிறது. இதன் காரணமாக உஷாரான மக்கள் சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுத்தாலே அதி கனமழை இருக்கும் என்ற நிலையில், தங்களது கார்களை அருகில் இருக்கும் மேம்பாலங்களில் நிறுத்தி விடுகின்றனர்.
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்:
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “ஃபெங்கால்” என்ற சூறாவளி புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை நிலவரப்படி, அட்சரேகைக்கு அருகில், 12.2°N மற்றும் தீர்க்கரேகை 81.2°E, சுமார் 150 புதுச்சேரிக்கு கிழக்கே கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ., நாகப்பட்டினத்திலிருந்து வடகிழக்கே 210 கி.மீ., திரிகோணமலைக்கு வடக்கே 400 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது நவம்பர் 30-ம் தேதி மாலையில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடிய புயலாக கிட்டத்தட்ட மேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்க்கிங் ஏரியாவாக மாறிய மேம்பாலங்கள்:
இந்நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல் மிதமான மழை பதிவான நிலையில், இன்று அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழத்தொடங்கியுள்ளது. மழை நீர் தேங்கும் பகுதிகளில் சென்னை மாநகராட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பாக நவீன இயந்திரங்கள் கொண்டு தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: ஃபெஞ்சல் புயல்.. சென்னைக்கு மழை.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்..
கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் தேங்கும் மழைநீர் காரணமாக வாகனங்கள் குறிப்பாக கார்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைகிறது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாய் மாறியது. வெள்ளப்பெருக்கின் போது அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் காலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
அப்போது ஒரு சிலர் அருகில் இருக்கும் மேம்பாலங்களில் கார்களை நிறுத்தி சென்று தண்ணீர் வடிந்ததும் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். இதன் காரணமாக உஷாரான மக்கள், தற்போது அதே யுக்தியை பயனபடுத்துகின்றனர். கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. அப்போது மழை வருவதற்கு முன்னதாகவே மக்கள் தங்களது வாகனங்களை மேம்பாலங்களில் நிறுத்திச் சென்றனர்.
மேலும் படிக்க: வேகமெடுக்கும் ஃபெஞ்சல் புயல்.. சென்னை நோக்கி நகர்வதால் தீவிரமடையும் மழை..
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் இந்த புயல் சென்னை அருகே கரையை கடக்கும் என்ற நிலையில், சென்னையில் பலத்த காற்றுடன் மழை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் உஷாரான மக்கள் நேற்று மாலை முதல் தங்களது வாகனங்களை அருகில் இருக்கும் மேம்பாலங்களில் நிறுத்தி வருகின்றனர். குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், ஈச்சங்காடு, ராயப்புரம் உள்ளிட்ட மேம்பாலங்களின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.