5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Leave: கனமழை எதிரொலி.. இந்த மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் சற்று  நிம்மதியடைந்துள்ளனர். கடந்த வாரம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கோவையில் தொடர்ச்சியாக மாலை நேரத்தில் கனமழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதியடையும் சூழல் உருவானது குறிப்பிடத்தக்கது. 

School Leave: கனமழை எதிரொலி.. இந்த மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 23 Oct 2024 07:17 AM

கனமழை காரணமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (22-10-2024) காலை 0530 மணி அளவில், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதிகளில், பாரதீப்பிற்கு (ஒரிசா) தென்கிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்காளம்) தெற்கு- தென்கிழக்கே 750 கிலோமீட்டர் தொலைவிலும், கேப்புப்பாராவிற்கு (வங்கதேசம்) தெற்கு- தென்கிழக்கே 730 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், 23-ஆம் தேதி வாக்கில் புயலாக வலுபெறக்கூடும். இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக நிலவக்கூடும். இது, வடக்கு ஒரிசா – மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24 ஆம் தேதி இரவு – 25 ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மொயம் குறிப்பிட்டுள்ளது.


அது போக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக உள் மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. பல குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் நல்ல மழை பதிவாகி வருகிறது.

இதன் காரணமாக, கோவை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல், திருப்பூர் மாவட்டத்திலும் கனமழை எதிரொலி காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறித்துள்ளார்.

மேலும் படிக்க:  மக்களே ரெடியாகுங்க.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

அதிலும் குறிப்பிட்டு வட தமிழ்நாட்டில் இல்லாமல் உள் தமிழகத்தில் மழை பதிவாகிறது. அந்த வகையில் இன்று, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Latest News