5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Leave: கனமழையால் ஸ்தம்பித்த மதுரை.. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர்..

நேற்று ஒரு நாள் பெய்த கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. மீனாட்சிபுரம், செல்லூர், பரவை, விளாங்குடி, முல்லை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் அளவு மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொது மக்கள் செய்வதிரியாது திகைத்து போயுள்ளனர்.

School Leave: கனமழையால் ஸ்தம்பித்த மதுரை.. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 12 Nov 2024 15:38 PM

மதுரையில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நேற்று எதிர்ப்பாராத விதமாக கனமழை கொட்டித்தீர்த்தது. சுமார் 15 நிமிடங்களில் 45 மி.மீ அளவு மழை பதிவானது. இதன் காரணமாக மதுரை மாநகரம் முழுவதுமே மழைநீரால் சூழப்பட்டுள்ளது. 1933 ஆம் ஆண்டு மதுரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகு பதிவான அதிகப்படியான மழையின் அளவு இது என கூறப்படுகிறது. நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 7 மணி வரை மதுரையில் சுமார் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேக வெடிப்பு காரணமாக இந்த மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மதுரையில் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் நாளை மறுநாள் முதல் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:


மதுரையில் பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று ஒருநாள் மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை கிழக்கு மற்றும் மதுரை வடக்கு ஆகிய இரு வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிக்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேற்று ஒரு நாள் பெய்த கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. மீனாட்சிபுரம், செல்லூர், பரவை, விளாங்குடி, முல்லை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் அளவு மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொது மக்கள் செய்வதிரியாது திகைத்து போயுள்ளனர்.

மேலும் படிக்க: தத்தளிக்கும் மதுரை… 70 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டித்தீர்த்த மழை!

இதற்கு முன்னாள் இவ்வளவு மழை ஒரே நாளில் பதிவாகாத நிலையில், பொது மக்கள் வீடுகளுக்கு தண்ணீர் புகுந்துள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். ஒரு சில பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், பூச்சிகள் மற்றும் பாம்புகள் வீடுகளுக்கு புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பாதுகாப்பு காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பி. மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்தும் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தனியார் வானிலை ஆய்வாளர் சொல்வது என்ன?


இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவிக்கையில், “ வழக்கமாக ஒரு சூறாவளி புயல் ஒடிசா அல்லது மேற்கு வங்கத்தை நோக்கி செல்லும் போது அதன் தாக்கம் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும். அந்த வகையில் இந்த மழை அடுத்த இரண்டு நாட்களுக்கு நீடிக்கும். குறிப்பாக உள் தமிழகத்தில் மழை இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest News