School Leave: கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – எங்கெல்லாம் தெரியுமா?
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கிய நிலையில் மழையில் தீவிரம் அதிகரித்துள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார். இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதேசமயம் பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிள்ளது.சென்னையில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்த நிலையில் காலை நிலவரத்தைப் பொறுத்தே கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் மாவட்ட ஆட்சியர் பழனி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Also Read: Chennai Rains: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்.. எத்தனை நாட்களுக்கு? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கிய நிலையில் மழையில் தீவிரம் அதிகரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று முன்தினம் மாறியது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை விட்டு விட்டு பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி சிவகங்கை,திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, ராமநாதபுரம், நீலகிரி, தூத்துக்குடி, மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Also Read: மழைக்காலத்தில் சளி தொல்லையா? இந்த டிப்ஸ் பெரிதும் உதவும்..!
இதனிடையே தமிழ்நாட்டின் மழையின் அளவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 14 செ.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதேபோல் கொள்ளிடத்தில் 13.4 செ.மீ., மழையும், தரங்கம்பாடியில் 5.9 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.