5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Conference: த.வெ.க., மாநாடு நடக்குமா? மழையால் தேங்கும் பணிகள்!

 வருகின்ற அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான பணிகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. ஆனால்  விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநாட்டு திடல் முழுவதும் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது.

TVK Conference: த.வெ.க., மாநாடு நடக்குமா? மழையால் தேங்கும் பணிகள்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 25 Oct 2024 10:59 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் மழை பெய்து வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் இடம் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் திட்டமிட்டபடி மாநாடு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். கடந்த 10 ஆண்டுகளாக அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் வெளிவந்துக் கொண்டே இருந்த நிலையில் அதற்கேற்றாற்போல் விஜய்யின் செயல்களும் அமைந்தது. இப்படியான நிலையில் விஜய்யின் வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டு  சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என்ற குறிக்கோளுடன் மெதுவாக தன்னுடைய அரசியல் அடியை எடுத்து வைத்து வருகிறார்.

Also Read: School, College Leave: கனமழை எச்சரிக்கை.. 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..

இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான பணிகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. ஆனால்  விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநாட்டு திடல் முழுவதும் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் மாநாட்டு பணிகளை மேற்கொள்வதில் சிரமமும், தாமதமும் ஏற்பட்டுள்ளது.

Also Read: Chennai Rain: சென்னை கனமழையால் மின்சார பிரச்னையா? – உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் மாநாட்டு பணிகள் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில்  வருகின்ற 27 ஆம் தேதிக்குள் மாநாட்டுக்கான பணிகளை முழுமையாக முடிக்க முடியுமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விஜய் வழங்கிய அறிவுரை

முன்னதாக கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் மாநாட்டுக்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் கலந்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்தனர். இதுதொடர்பான போட்டோ, வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த கூட்டத்தைப் பார்த்து மாநாடு மீது சாதாரண மக்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே மாநாடு தொடர்பாக  வெளியிடப்ப்ட்ட அறிக்கையில், “இப்படியான நிலையில் மாநாட்டுக்கான களப்பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அழைப்பிதழ் தொடங்கி பேனர், போஸ்டர், சுவர் விளம்பரங்கள் என திரும்பும் திசையெங்கும் தமிழக வெற்றிக் கழக மாநாடு பற்றி தான் பேசுபொருளாக உள்ளது. இந்த மாநாட்டுக்கு சட்டமன்றத் தொகுதி அளவில் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்ட்ய். அதன்படி மாவட்ட தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் ஒருங்கிணைந்து செயல்பட 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும்.நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்கப் பெரும்படை. இளஞ்சிங்கப் படை. சிங்கப் பெண்கள் படை. குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை” என தெரிவித்திருந்தார்.

பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான குடிமகனைத்தான் (Citizen) நாடு மதிக்கும். அதிலும் முன்னுதாரணமாகத் (Role model) திகழும் மனிதனைத்தான் மக்கள் போற்றுவர். ஆகவே, நம் கழகத்தினர் இம்மூன்றாகவும் இருக்க வேண்டும் என்பதே என் பெருவிருப்பம்.

மக்கள் இயக்கமாக இருந்த நாம், மக்களோடு மக்களாக நின்று களமாடி, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப் போகும் இயக்கமாக மாறிவிட்டோம். அரசியல் களப் பணிகள் வேறு. அதற்கான நடைமுறைகள் வேறு என்பதை உணர வேண்டும்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News