Tamil Nadu Weather: அலர்ட் மக்களே.. சென்னையில் 2 நாட்கள் வெளுக்கப்போகுது மிக கனமழை!

Chennai Rain Update: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது. குறிப்பாக சென்னையில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது.

Tamil Nadu Weather: அலர்ட் மக்களே.. சென்னையில் 2 நாட்கள் வெளுக்கப்போகுது மிக கனமழை!

மழை (picture credit : PTI)

Updated On: 

17 Dec 2024 17:57 PM

சென்னையில்  இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே சென்னையில் பெரிய அளவில் மழை பொழிவு இல்லை.  குறிப்பாக டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. காலை நேரங்களில மேக மூட்டமாகவும், இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்தும் வருகிறது. சமீபத்தில் உருவான ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. ஆனால், பெரிய அளவில் மழை பொழிவு இல்லை என்றே சொல்லலாம். ஆனால், அதே ஃபெங்கல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக,  வட மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை

அதே நேரத்தில் புதுச்சேரியிலும் வரலாறு காணாத மழை பெய்தது.   இந்த மழையால் தமிழக வட மாவட்டங்கள், புதுச்சேரியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  தற்போது தான் இயல்பு நிலை திரும்பியுள்ளது.  இந்த நிலையில், கடந்த வாரம் வங்கக் கடலில்  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது. இதனால்  தமிழகத்தில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி  மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில், நேற்று புதிதாக வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது என்று வானிலை மையம் தெரிவித்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக,  சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக  கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட விடுக்கப்பட்டுள்ளது.

Also Read : சைகை காட்டி மோப்ப நாய்… சென்னை ஏர்போர்டில் சிக்கிய ரூ.7.5 கோடி கஞ்சா.. நடந்தது என்ன?

வங்கக் கடலில் புயல் சின்னமா?

நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 2 நாட்களில் மேலும்  வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இது புயலாக உருவாகுமா  போன்ற எந்த தகவலையும் வானிலை மையம் கூறவில்லை.

இதன் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. நாளை (டிசம்பர் 17) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

Also Read : நோட் பண்ணுங்க.. மின் கட்டணம் செலுத்துவதில் அதிரடி மாற்றம்.. குழப்பத்தில் பயனர்கள்!

மேலும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

இணையத்தை கலக்கும் சோபிதாவின் நியூ ஆல்பம்
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்?
காலையில் அலாரம் வைத்து எழுந்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!
நடிகை ரித்திகா சிங் சினிமா பயணம்