5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இன்று முதல் மீண்டும் 21 மின்சார ரயில்கள் ரத்து.. எத்தனை நாட்களுக்கு? எந்த வழித்தடத்தில் ?

சென்னை புறநகர் மற்றும் உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையான மின்சார ரயில்கள் இருப்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதும், பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது. இதனால், பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இன்று முதல் மீண்டும் 21 மின்சார ரயில்கள் ரத்து.. எத்தனை நாட்களுக்கு? எந்த வழித்தடத்தில் ?
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 24 Aug 2024 20:58 PM

மின்சார ரயில்கள் ரத்து: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று இரவு 9 மணி முதல் 21 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. 11 ரயில்கள் முழு நேரமாகவும், 10 ரயிலகள் பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்படுகிறது. இன்று இரவு முதல் நாளை அதிகாலை 4.30 மணி வரை இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை புறநகர் மற்றும் உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையான மின்சார ரயில்கள் இருப்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதும், பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது. இதனால், பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.


இந்த நிலையில் சென்னை கடற்கரை- விழுப்புரம் வழிதடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்று இரவு முதல் நாளை காலை வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

முழுவதுமாக ரத்து செய்யப்படும் மின்சார ரயில் விவரங்கள்:

  • கடற்கரையில் இருந்து இன்று இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்
  • கடற்கரை- தாம்பரம் இடையே இரவு 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்
  • தாம்பரம் – கடற்கரை இரவு 10.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்
  • இரவு 11.20 மணிக்கு புறப்படும் தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில்
  • இரவு 11.40 மணி தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில்
  • திருவள்ளூரில் இருந்து கடற்கரைக்கு இரவு 9.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்
  • கடற்கரையில் இருந்து திருவள்ளூருக்கு இரவு 7.50 மணிக்கு புறப்படும் ரயில்
  • இரவு 9.20 மணி கடற்கரை-கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்
  • இரவு 9.55 மணி கும்மிடிப்பூண்டி- கடற்கரை மின்சார ரயில்
  • கடற்கரையில் இருந்து அரக்கோணத்திற்கு நாளை அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்
  • கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நாளை அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில்

மேலும் படிக்க: பாராசிட்டமால் உள்ளிட்ட 156 மருந்துகளுக்கு தடை.. இப்படி ஒரு ஆபத்தா?

பகுதி நேரமாக ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள்:

  • இரவு 8.45 மணிக்கு செங்கல்பட்டு – கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில், எழும்பூர்- கடற்கரை நிலையம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • இரவு 9.10 மணிக்கு செங்கல்பட்டு – கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில் எழும்பூர்- கடற்கரை நிலையம் இடையே ரத்து.
  • திருவள்ளூர்- கடற்கரை இடையே இரவு 8 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் எழும்பூர்-கடற்கரை இடையே ரத்து.
  • செங்கல்பட்டு – கடற்கரை இடையே இரவு 10.10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் எழும்பூர்- கடற்கரை இடையே ரத்து
  • செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரவு 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,
    கடற்கரை – செங்கல்பட்டு இடையே இரவு 10.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்.
    கடற்கரை – தாம்பரம் இடையே 11.05 மணி, இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் கடற்கரை – எழும்பூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், கடற்கரை – செங்கல்பட்டு இடையே நாளை அதிகாலை 3.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் கடற்கரை – எழும்பூர் நிலையம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளன

.

 

Latest News