5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Train Cancellation: திருசெந்தூர் – நெல்லை இடையே பயணிகள் ரயில் ரத்து.. எத்தனை நாட்களுக்கு? எப்போது முதல்?

மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக நம்பி இருப்பது ரயில் போக்குவரத்து தான். கோடிக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள ரயில்களையே நம்பியுள்ளனர். மேலும், மக்களின் வசதிக்காக ரயில்வே துறையும் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதுமட்டுமின்று விரைவு ரயில், சிறப்பு ரயில், வந்தே பாரத், சதாப்தி போன்ற ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பண்டிகை நாட்களில் இதற்கென சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

Train Cancellation: திருசெந்தூர் – நெல்லை இடையே பயணிகள் ரயில் ரத்து.. எத்தனை நாட்களுக்கு? எப்போது முதல்?
கோப்பு புகைப்படம் (pic courtesy: twitter)
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 18 Nov 2024 11:13 AM

பயணிகள் ரயில் ரத்து: திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில், எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக திருச்செந்தூர் முதல் நெல்லை வரையிலான பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதாக மதுரை ரயில்வே கோட்டம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக நம்பி இருப்பது ரயில் போக்குவரத்து தான். கோடிக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள ரயில்களையே நம்பியுள்ளனர். மேலும், மக்களின் வசதிக்காக ரயில்வே துறையும் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதுமட்டுமின்று விரைவு ரயில், சிறப்பு ரயில், வந்தே பாரத், சதாப்தி போன்ற ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பண்டிகை நாட்களில் இதற்கென சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. வந்தே பாரத் ரயிலும் இயக்கப்பட்டு வரும் நிலையில், ரயில் நிலையத்தை மேம்படுத்தும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன காரணமாக நெல்லை – திருச்செந்தூர் இடையே பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதாக மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. அதாவது இன்று முதல் அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரை சுமார் 25 நாட்களுக்கு இந்த ரயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 8.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் ரெயிலும், மாலை 4.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருச்செந்தூர், நெல்லை இடையே வெல்லும் வேறு ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பயண திட்டங்களை இதற்கு ஏற்றவாறு திட்டமிடும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க நடப்பாண்டு தீபாவளியை முன்னிட்டு நான்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி முதல் மேட்டுப்பாளையம் வரையும், திருநெல்வேலி முதல் சென்னை எழும்பூர் வரையில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ”அவ்வளவு சீக்கிரம் சும்மா விடமாட்டேன் “ – மகாவிஷ்ணு விவகாரத்தில் கொந்தளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்..

06070 என்ற எண் கொண்ட திருநெல்வேலி முதல் சென்னை எழும்பூர் வரையிலான வாராந்திர சிறப்பு முறையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.

திருநெல்வேலி முதல் மேட்டுப்பாளையம் வரை அக்டோபர் 6 ஆம் தேதி முதல் நவம்பர் 24ஆம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வாராந்திர சிறப்பு ரயில் (06029) இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேட்டுப்பாளையம் முதல் திருநெல்வேலி வரை வாராந்திர சிறப்பு ரயில் (06030) அக்டோபர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை இயக்கப்படுகிறது.

 

Latest News