Tiruvallur Train Accident: திருவள்ளூர் ரயில் விபத்து.. 13 ரயில் இயக்கத்தில் மாற்றம்.. தென்னக ரயில்வே அறிவிப்பு.. - Tamil News | due to train accident in kavaraipettai southern railway has announced diversion of 13 train skipping stoppage | TV9 Tamil

Tiruvallur Train Accident: திருவள்ளூர் ரயில் விபத்து.. 13 ரயில் இயக்கத்தில் மாற்றம்.. தென்னக ரயில்வே அறிவிப்பு..

மைசூர் தர்பங்கா விரைவு ரயிலும் சரக்கு ரயிலும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில் இந்த விபத்து நடந்துள்ளது. கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி உள்ளது. மைசூருவிலிருந்து தர்பங்காவிற்குச் பாக்மதி சென்று கொண்டிருந்த பாக்மக்தி விரைவு ரயில், கவரப்பேட்டை அருகே நின்றுக் கொண்டிருந்த  சரக்கு ரயில் மீது  மோதியது.  இரண்டு ரயில்களும் மோதியதால் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து ஏரிந்துள்ளது. இதில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Tiruvallur Train Accident: திருவள்ளூர் ரயில் விபத்து.. 13 ரயில் இயக்கத்தில் மாற்றம்.. தென்னக ரயில்வே அறிவிப்பு..

கோப்பு புகைப்படம்

Published: 

12 Oct 2024 09:35 AM

திருவள்ளூரில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக சுமார் 13 ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. மைசூர் தர்பங்கா விரைவு ரயிலும் சரக்கு ரயிலும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில் இந்த விபத்து நடந்துள்ளது. கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி உள்ளது. மைசூருவிலிருந்து தர்பங்காவிற்குச் பாக்மதி சென்று கொண்டிருந்த பாக்மக்தி விரைவு ரயில், கவரப்பேட்டை அருகே நின்றுக் கொண்டிருந்த  சரக்கு ரயில் மீது  மோதியது.  இரண்டு ரயில்களும் மோதியதால் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து ஏரிந்துள்ளது. இதில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் இரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தகவல் கிடைக்கப்பெற்றவுடன், மாண்புமிகு அமைச்சர் நாசர், அவர்களையும் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன்.

மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கெனத் தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது.விபத்துக்குள்ளான இரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு.. விசாரணை நடத்த சிவில் ஏவியேஷனுக்கு உத்தரவு..

இரண்டு ரயில்கள் மோதியதில் ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் புரண்டு அடுத்து இருக்கும் தண்டவாள பாதையில் ஆக்கிரமித்தது. ரயில் பெட்டிகளை அப்புரப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த ரயில் விபத்து காரணமாக, பல்வேறு ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், “

  • 10 அக்டோபர் 2024 அன்று ஹவுராவில் இருந்து 17.40 மணிக்கு புறப்பட்ட ரயில் எண்.12663 ஹவுரா திருச்சிராப்பள்ளி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் கூடூர் வழியாக திருப்பி விடப்பட்டது. ரேணிகுண்டா, மேல்பாக்கம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரத்தில் நிறுத்தம் கிடையாது.
  • 10 அக்டோபர் 2024 அன்று கோரக்பூரிலிருந்து 06.35 மணிக்குப் புறப்பட்ட ரயில் எண் 12511 கோரக்பூர் – கொச்சுவேலி, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் நிறுத்தப்படுவதைத் தவிர்த்து, கூடூர், ரேணிகுண்டா, மேல்பாக்கம், காட்பாடி வழியாக இயக்கப்படும்.
  • 12 அக்டோபர் 2024 அன்று 15.30 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண்.22663 சென்னை எழும்பூர் – ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழியாக இயக்கப்படும்.
  • 12 அக்டோபர் 2024 அன்று திருநெல்வேலியில் இருந்து 03.00 மணிக்கு புறப்பட்ட ரயில் எண்.22606 திருநெல்வேலி – புருலியா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மேல்பாக்கம், ரேணிகுண்டா, கூடூர் வழியாக திருப்பி விடப்படும்
  • ரயில் எண். 12603 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் 12 அக்டோபர் 2024 அன்று 16.45 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டு அரக்கோணம் வழியாக இயக்கப்படும். ரேணிகுண்டா, கூடூர், சூலுருப்பேட்டையில் முறையாக நிறுத்தம் கிடையாது.
  • 12 அக்டோபர் 2024 அன்று 16.00 மணிக்கு புறப்படும் ரயில் எண்.17643 செங்கல்பட்டு – காக்கிநாடா போர்ட் சர்கார் எக்ஸ்பிரஸ் அரக்கோணம் வழியாக திருப்பி விடப்படும். ரேணிகுண்டா, கூடூர், கும்மிடிப்பூண்டி, சூலுறுப்பேட்டை மற்றும் நாயாடுபேட்டையில் நிறுத்தத்தை முறையாகத் தவிர்க்கிறது.
  • ரயில் எண்.12669 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சப்ரா கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் 12 அக்டோபர் 2024 அன்று 17.40 மணிக்கு புறப்படத் திட்டமிடப்பட்டு அரக்கோணம், ரேணிகுண்டா கூடூர் வழியாக இயக்கப்படும்.
  • 12.10.2024 அன்று 17.40 மணிக்கு புறப்படும் ரயில் எண்.12615 சென்னல் எழும்பூர் புதுடெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழியாக இயக்கப்படும்.
  • 11 அக்டோபர் 2024 அன்று காலை 07.10 மணிக்குப் புறப்பட்ட ரயில் எண்.22306 ஜசிதிஹ்-எஸ்எம்விடி பெங்களூரு எக்ஸ்பிரஸ், திருத்தணியில் கூடுதல் நிறுத்தத்துடன் பெரம்பூரில் நிறுத்தத்தைத் தவிர்த்து, கூடூர், ரேணிகுண்டா, மேல்பாக்கம் வழியாக இயக்கப்படும்.
  • அக்டோபர் 11, 2024 அன்று புருலியாவில் இருந்து காலை 11.20 மணிக்கு புறப்பட்ட ரயில் எண்.22605 புருலியா – திருநெல்வேலி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், பெரம்பூர் மற்றும் அரக்கோணத்தில் நிறுத்தப்படுவதால், திருத்தணியில் கூடுதல் நிறுத்தத்துடன் கூடூர், ரேணிகுண்டா, மேல்பாக்கம் வழியாக இயக்கப்படுகிறது.
  • ரயில் எண்.12841 ஷாலிமார் – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 11 அக்டோபர் 2024 அன்று ஷாலிமாரில் இருந்து 15.20 மணிக்கு புறப்பட்டு கூடூர், ரேணிகுண்டா, அரக்கோணம் வழியாக டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்டது.
  • ரயில் எண்.12656 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் 12 அக்டோபர் 2024 அன்று 10.10 மணிக்குப் புறப்பட திட்டமிடப்பட்டு 12.10 மணிக்கு (2 மணி நேரம் தாமதமாக) புறப்பட்டு அரக்கோணம் வழியாக இயக்கப்படும். ரேணிகுண்டா மற்றும் கூடூர், சூலுருபேட்டையில் நிறுத்தம் கிடையாது.
  • ரயில் எண்.03326 கோயம்புத்தூர் – தன்பாத் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் 12 அக்டோபர் 2024 அன்று 12.55 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டது, இணைக்கும் ரயில் தாமதமாக ஓடுவதால் அக்டோபர் 13, 2024 அன்று (11 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக) 00.15 மணிக்குப் புறப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால் என்னாகும்?
செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
Exit mobile version