5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

E- Pass: ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்களது தொலைபேசி எண்களை அடிப்படையாக வைத்து இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. முதலில் ஜூன் 30 ஆம் தேதி வரை அமலில் இருந்த இ-பாஸ் முறை அதன் பின்னர் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு உத்தரவு பிறப்பித்தது.இதனிடையே கொடைக்கானல் செல்லும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பெற்று செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

E- Pass: ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 08 Nov 2024 19:09 PM

இ-பாஸ்: ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும்
உதகை, கொடைக்கானலுக்கு இ பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு சுற்றுலா தலங்களின் சொர்க்கப்பூமியாக திகழ்கிறது. இங்கு உயரமான மலை வாசஸ்தலம் தொடங்கி ஆறுகள், அருவிகள் என பல விதமான அனுபவங்களை நமக்கு கற்றுத்தரும் இடங்களும் உள்ளது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் அமைந்துள்ளது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் கடல் மட்டத்திலிருந்து 7 200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 1845 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கொடைக்கானல் தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது.

பசுமையான மலைகள், அருவிகள், ஏரிகள், கிராமப்புறங்கள் என கொடைக்கானல் சுற்றுலா செல்ல சிறந்த இடமாகவும் உள்ளது. ஆண்டுதோறும் கொடைக்கானலில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கொளுத்தும்  வெயிலை சமாளிக்க பலரும் கொடைக்கானலுக்கு படையெடுத்து செல்வது வழக்கம். இதன் காரணமாக வாகன நெரிசல், விடுதி அறைகள் பற்றாக்குறை, உணவு பெறுவதில் சிக்கல், கழிவுகள் என பல வகையான சிக்கல்கள் கொடைக்கானலில் எழுகிறது.

Also Read: Sabarimala: சபரிமலை போகும் பக்தர்களுக்கு சிக்கல்.. இந்த தப்பை பண்ணாதீங்க!

ஊட்டியிலும் இதே நிலைமை

இதே நிலைதான் நீலகிரி மாவட்டம் ஊட்டியிலும் இருப்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோர் இ-பாஸ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி https://epass.tnega.org/ என்ற இணையதளம் வாயிலாக இ-பாஸ் பெரும் முறை நடைமுறைக்கு வந்தது.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்களது தொலைபேசி எண்களை அடிப்படையாக வைத்து இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. முதலில் ஜூன் 30 ஆம் தேதி வரை அமலில் இருந்த இ-பாஸ் முறை அதன் பின்னர் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு உத்தரவு பிறப்பித்தது.இதனிடையே கொடைக்கானல் செல்லும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பெற்று செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதன் அனைத்து திசை நுழைவு வாயில்களிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

Also Read: Maharastra: தேர்தலில் ஜெயித்தால் தொகுதி இளைஞர்களுக்கு திருமணம்- வாக்குறுதி கொடுத்த வேட்பாளர்!

இந்த சோதனை சாவடிகளில் பணியாளர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் மேலானோர் இதுவரை பெற்று ஊட்டி மற்றும் கொடைக்கானல் சென்று வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அதேசமயம் செப்டம்பர் 30 ஆம் தேதி இரு மாவட்ட ஆட்சியர்களும் மறு உத்தரவு வரும் வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என தெரிவித்திருந்தனர்.

இப்படியான நிலையில் தான் இ-பாஸ் முறை கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேசமயம் அதற்கு விண்ணப்பிப்பவர்களின் பின்னணி விவரங்களையும் சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. புள்ளி விவரங்களுக்காகவும், இயற்கையை பாதுகாக்கும் நோக்கத்திலும் எதிர்காலத்தில் சுற்றுலா பயணிகள் வருகைக்கேற்ப திட்டங்களை வகுக்கவும் இந்த இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இ-பாஸ் பெறுவது எப்படி?

  • https://epass.tnega.org/ என்ற இணையதளம் உள்ளே செல்ல வேண்டும்.
  • அதில் இந்தியாவுக்கு உள்ளே / வெளியே ஆப்ஷனில் எது உங்களுக்கானதோ தேர்வு செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக மொபைல் நம்பர் மற்றும் கேப்சா இரண்டையும் கொடுக்க வேண்டும்
  • உங்களுடைய மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை  கொடுத்தால் அடுத்த பக்கம் செல்லும்.
  • இதில் ஊட்டி, கொடைக்கானல் இரண்டில் எது செல்ல வேண்டுமோ அதை கிளிக் செய்ய வேண்டும்
  • உள்ளூர் வாகனங்களும் பாஸ் பெறவும் தனியாக ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பின்னர் அதில் இபாஸ் வேண்டுபவர்களின் பெயர்கள், வண்டி எண், முகவரி, சுற்றுலா வரும் நாள் என அனைத்தையும் தகவலையும் பெற வேண்டும்.

 

Latest News