5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

எடப்பாடி பழனிச்சாமி திமுகவிற்கு மறைமுகமாக உதவி செய்து வருகிறார்- டிடிவி தினகரன்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினர், கூட்டணி கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கோவையிலும் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாக கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் பாஜக வேட்பாளரான அண்ணாமலையை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் வெற்றி வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார் எனவும் அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் […]

எடப்பாடி பழனிச்சாமி திமுகவிற்கு மறைமுகமாக உதவி செய்து வருகிறார்- டிடிவி தினகரன்
intern
Tamil TV9 | Updated On: 30 Sep 2024 17:23 PM

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினர், கூட்டணி கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையிலும் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாக
கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் பாஜக வேட்பாளரான அண்ணாமலையை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் வெற்றி வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார் எனவும் அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகத்தில் பொருளாதரத்தில் இந்தியா முன்னேறும் எனவும் கூறினார். சிறந்த உழைப்பாளி அண்ணாமலை என கூறிய டிடிவி தினகரன் அண்ணாமலை நன்கு படித்தவர்,சிறந்த உழைப்பாளி மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கக் கூடியவர் என புகழ்ந்தார்.

மூன்று மாதங்களுக்கு முன்பே அண்ணாமலை சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தோம் எனவும் தமிழகத்தில் நாம் அமைக்கும் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் கூட்டணியாக இருக்க வேண்டும் எனவும் நிபந்தனையற்ற ஆதரவு தருகிறேன் என்று சொல்லி இருந்தேன் என்றார்.

மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வந்தால் தான் நாட்டிற்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறினார். தமிழ்நாட்டில் தற்பொழுது ஆட்சி செய்கிறது தீய சக்தி திமுகவை வீழ்த்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

1989 தேர்தலில் இருந்து 2011-ம் தேர்தல் வரை கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வதற்கு பல அழுத்தங்கள் இருக்கும் என்று கூறினார்.
தமிழ்நாட்டில் மாபெரும் கூட்டணி அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பல்வேறு கூட்டணி கட்சிகள் அமைப்புகள் தேசிய ஜனநாயகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

நாங்கள் தான் அம்மாவின் உண்மையான கட்சி எனவும் சேலத்து சிங்கம் எடப்பாடி பழனிச்சாமி ஏன் போட்டியிடவில்லை எனவும் மோடியை பிரதமர் ஆக்க வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

முதல்வர் ஸ்டாலினோ எடப்பாடி பழனிச்சாமியும் யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு பயம் என விமர்சித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் ஊழல்கள் நடைபெற்றது ஸ்டாலின் ஆட்சியில் நடந்த வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி திமுகவிற்கு மறைமுகமாக உதவி செய்து வருகிறார் என்றார்.

திமுகவினர் மக்களை ஏமாற்றி ஆட்சி அமைந்து விட்டார்கள் விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைத்து துறையும் இந்த ஆட்சி ஏமாற்றி வருகிறது.

தேசிய ஜனநாயக கட்சி தோற்கடிப்பதற்காக அதிமுக திமுகவுடன் கள்ளக் கூட்டணியில் இருக்கிறது.பிரதமர் மோடிக்கு இணையான வேட்பாளர் எந்த கூட்டணியிலும் இல்லை என்று கூறினேன். கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை வெற்றி செய்ய வேண்டும். சென்னைக்கு அடுத்து கோவை தான் தொழிலில் பெரும் வளர்ச்சியில் உள்ளது என்று கூறினார்

Latest News