Mayor Election : கோவை, நெல்லை-க்கு மேயர் தேர்தல் நடத்த அனுமதி.. மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு! - Tamil News | Election commission of Tamil Nadu has approved to conduct election for coimbatore and tirunelveli mayor posts | TV9 Tamil

Mayor Election : கோவை, நெல்லை-க்கு மேயர் தேர்தல் நடத்த அனுமதி.. மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

Published: 

25 Jul 2024 19:23 PM

Election Commission of Tamil Nadu | தற்போது காலியால உள்ள திருநெல்வேலி மாநகராட்சி மேயர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்பிடும் பொருட்டு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களை தேர்ந்தெடுத்திட உரிய அறிவுரைகளை தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

Mayor Election : கோவை, நெல்லை-க்கு மேயர் தேர்தல் நடத்த அனுமதி.. மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

மாநகராட்சி அலுவலகங்கள்

Follow Us On

மேயர் தேர்தல் : தற்போது காலியாக உள்ள கோவை மற்றும் நெல்லை மேயர் பதவிகளுக்கு, தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது காலியால உள்ள திருநெல்வேலி மாநகராட்சி மேயர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்பிடும் பொருட்டு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களை தேர்ந்தெடுத்திட உரிய அறிவுரைகளை தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலி பதவிகளுக்கும் தேர்தல்

மேலும் ஆணையத்திற்கு ஏற்கனவே அறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்ட ஏனைய நகர்ப்புற மற்றும் ஊரக உள்லாட்சி அமைப்புகளில் உள்ள காலி பதவியிடங்களுக்கும் சேர்த்து மறைமுக தேர்தல் நடத்துவதற்கான கூட்டங்களை நடத்தி, அந்த பதவி இடங்களை நிரப்பிட உரிய அறிவுரைகளை சம்மந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

காலியாக உள்ள இரண்டு மாநகராட்சி மேயர் பதவிகள்

கோவையில் மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்தகுமாரும், திருநெல்வேலி மேயராக பி.எம்.சரவணனும் பதவி வகித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவருக் கடந்த ஜூலை 3 ஆம் தேதி தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இது குறித்து தெரிவித்த கல்பனா, தனக்கு கட்சியில் இருந்து எந்த அழுத்தமும் வரவில்லை என்றும் உடல்நல பிரச்னைகள் காரணமாகவே பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். மேலும் தனக்கு கவுன்சிலராக இருப்பதற்கு தான் விருப்பம் என்றும், ஆனால் தான் மேயராக்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இதையும் படிங்க : Viral Video : ஆர்டர் செய்த உணவை திருட்டுத் தனமாக பிரித்து சாப்பிட்ட டெலிவரி பாய்.. கையும் களவுமாகப் பிடித்த நபர்!

தேர்தல் நடத்த அனுமதி வழங்கிய மாநில தேர்தல் ஆணையம்

இதேபோல திருநெல்வேலி மேயர் சரவணன் தனக்கு கட்சியில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாகவும் விளக்கம் அளித்திருந்தார். இரண்டு மாநகராட்சி மேயர்களும் பதவி விலகிய நிலையில், கோவை மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிகள் காலியாக இருந்தன. இந்நிலையில் தற்போது காலியாக உள்ள மேயர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் எப்படி?

கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
Exit mobile version