5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Flag: கொடியில் யானை.. த.வெ.க கட்சிக்கு எதிராக புகார்… தேர்தல் ஆணையம் பரபரப்பு பதில்!

த.வெ.க கொடி: தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை சின்னம் இடம்பெற விவகாரத்தில் தேர்தல் தேர்தல் ஆணையம் தலையீடாது என்று பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு பதில் அளித்துள்ளது. அரசியல் கட்சிக் கொடியில் இடம்பெறும் சின்னங்களுக்கு ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்காது என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும், தேர்தல் நேரத்தில் அவர்கள் கட்சியின் சின்னமாக யானையை பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது.

TVK Flag: கொடியில் யானை.. த.வெ.க கட்சிக்கு எதிராக புகார்… தேர்தல் ஆணையம் பரபரப்பு பதில்!
விஜய்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Sep 2024 11:35 AM

தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை சின்னம் இடம்பெற விவகாரத்தில் தேர்தல் தேர்தல் ஆணையம் தலையீடாது என்று பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு பதில் அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியின் யானை உருவம் இடம்பெற்றது குறித்து தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி புகார் அளித்தது. அதாவது, தவெக கொடியில் யானை உருவம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி புகார் அளித்தது. இந்த புகாருக்கு தற்போது தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை சின்னம் இடம்பெற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையீடாது என்றும் அரசியல் கட்சிக் கொடியில் இடம்பெறும் சின்னங்களுக்கு ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்காது என்று விளக்கம் அளித்துள்ளது.

த.வெ.க கொடியில் யானை

மேலும், தேர்தல் நேரத்தில் அவர்கள் கட்சியின் சின்னமாக யானையை பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியல் தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை குறித்து வைத்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கி இருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு பல்வேறு சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை கருத்தி கொண்டு தனது ஒவ்வொரு நகர்வையும் விஜய் எடுத்து வருகிறார்.

Also Read: தம்பதி கொடூர கொலை.. ஒருநாள் முழுவதும் சடலத்துடன் காரில் சுற்றிய கும்பல்… அதிர்ச்சி வாக்குமூலம்!

அந்த வகையில் அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியை விஜய் அறிமுகப்படுத்தினார். இது ஒருபக்கம் வரவேற்பை பெற்றாலும், மற்றொரு பக்கம் மிகப்பெரிய அளவி விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழக கொட்டிக்கு எதிராக புகார் ஒன்று எழுந்தது.

தேர்தல் ஆணையம் பதில்:

அதாவது, த.வெ.க கொடியில் இடம்பெற்றிருக்கும் யானையை சுட்டிக் காட்டி தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. தேர்தல் ஆணையம் விதிமுறைப்படி சிக்கிம், அசாம் ஆகிய மாநிலங்கள் தவிர எந்த மாநிலமும் யானையை அடையாளமாக பயன்படுத்தக்கூடாது. எனவே அதனை நீக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆனந்தன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் கொடி தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி அளித்த புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு கட்சியின் கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையீடாது. ஒரு கட்சியின் கொடிக்கு நாங்கள் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்குவது இல்லை. தேர்தல் நேரத்தில் அவர்கள் கட்சியின் சின்னமாக யானையை பயன்படுத்த முடியாது.

Also Read: ஆயத பூஜை, தீபாவளிக்கு ஊருக்கு போக ரெடியா? ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஒரு கட்சிக்கு கொடி இருக்கிறது என்றால் அந்த கட்சி தான் பொறுப்பு. மற்ற கட்சிகளின் சின்னத்தை விதிமீறாமல் இருக்க வேண்டும். இந்த கட்சி கொடியானது வேறு எந்த கட்சி கொடி போன்று இல்லை. இலச்சினைகள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தடுப்பு) சட்டம், 1950 அல்லது இந்தியாவின் கொடி குறியீடு அல்லது தலைப்பு தொடர்பான பிற தொடர்புடைய சட்டத்தின் விதிகளை தமிழக வெற்றிக் கழக கட்சி மீறவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

த.வெ.க மாநாடு:

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி சாலை கிராமத்தில் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்க உள்ளது. மாநாட்டிற்கு இன்றும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள கட்சியின் தலைவர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மாநாடு நடத்துவதற்கான பணிகளை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகிறார்.

Latest News