Chennai Train: சென்னையில் 3 புதிய மின்சார ரயில்கள்.. எந்தெந்த ரூட் தெரியுமா? டைமிங் இதோ! - Tamil News | Electric trains to be operated 3 new routes from today in Chennai central avadi Tiruvallur routes tamil news | TV9 Tamil

Chennai Train: சென்னையில் 3 புதிய மின்சார ரயில்கள்.. எந்தெந்த ரூட் தெரியுமா? டைமிங் இதோ!

Updated On: 

09 Sep 2024 15:58 PM

சென்னையில் 3 வழித்தடங்களில் இன்று முதல் புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக சென்னை கோட்ட தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் 2 ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவடி - சென்னை சென்டிரல், சென்டிரல் - திருவள்ளூர், திருவள்ளூர் - சென்டிரல் இடையே ரயில்கள் இயக்கப்படுகிறது.

Chennai Train: சென்னையில் 3 புதிய மின்சார ரயில்கள்.. எந்தெந்த ரூட் தெரியுமா? டைமிங் இதோ!

சென்னை மின்சார ரயில்

Follow Us On

சென்னை மின்சார ரயில்கள்: சென்னையில் ரயில் போக்குவரத்தை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை புறநகர் மற்றும் உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையான மின்சார ரயியில்கள் இருப்பதால் நாள்தோறும் ஆயிக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை கடற்கரை – திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை – பட்டாபிராம் ஆகிய வழித்தடங்களில் தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடங்களில் மட்டும் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். மின்சார ரயில் சேவை ஒருநாள் இல்லாவிட்டாலும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால், மின்சார ரயில் சேவையை தொடர்ந்து இயக்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் 3 வழித்தடங்களில் இன்று முதல் புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக சென்னை கோட்ட தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் 2 ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “டிவி சத்தம் ஏன் அதிகமா இருக்கு?” இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்.. கோவையில் ஷாக்!

3 புதிய மின்சார ரயில்கள்:


இன்று முதல் 3 வழித்தடங்களி மூன்று புதிய மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, ஆவடி – சென்னை சென்டிரல் இடையே காலை 9.50 மணிக்கும், சென்டிரல் – திருவள்ளூர் இடையே காலை 10.40 மணிக்கும், திருவள்ளூர் – சென்டிரல் இடையே மாலை 3.50 மணிக்கும் மூன்று புதிய மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.  இதேபோன்று சில மின்சார ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Also Read: கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் கொட்டப்போகும் மழை… எங்கெங்கு?

கூடுவாஞ்சேரி – தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் இன்று முதல் சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, இரவு 8.55, 10.10, 10.25, 11.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதனை அடுத்து, மதியம் 12.10 மணிக்கு மூர் மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் இன்று முதல் சூலூர்பேட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version