5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

EB Bill: ரூ.4 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணம் வருதா? இனி இப்படிதான் கட்டணும்.. மின்வாரியம் அதிரடி!

மின் கட்டணம்: தமிழ்நாடு மின்வாரியம் மின்சார கட்டணத்தை செலுத்த சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது, 4,000 ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்தினால் இந்த மாதத்தில் இருந்து ரொக்கமாக செலுத்த முடியாது என்றும் ஆன்லைனில் தான் செலுத்த முடியும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

EB Bill: ரூ.4 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணம் வருதா? இனி இப்படிதான் கட்டணும்.. மின்வாரியம் அதிரடி!
மின் கட்டணம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 05 Oct 2024 13:37 PM

தமிழ்நாடு மின்வாரியம் மின்சார கட்டணத்தை செலுத்த சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது, 4,000 ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்தினால் இந்த மாதத்தில் இருந்து ரொக்கமாக செலுத்த முடியாது என்றும் ஆன்லைனில் தான் செலுத்த முடியும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை மின்சார பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணத்தை வசூலித்து வருகிறது.

மின் கட்டணம் செலுத்த புதிய முறை:

இந்த மின் கட்டணத்தை மக்கள் மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் செலுத்தி வருகின்றனர். மேலும், மின்வாரிய இணையதளம், ஜிபே, போன்பே போன்ற ஆன்லைன் செயலி மூலம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மின் கட்டணம் செலுத்தும் முறையில் மின்வாரியம் சில மாற்றங்களை செய்துள்ளது.

Also Read: சென்னை ஏர் ஷோ போற பிளான் இருக்கா? கூடுதல் பேருந்துகள் அறிவிப்பு.. பார்க்கிங் உள்ளிட்ட முழு விவரம் உள்ளே..

அதன்படி, மின்சார கட்டணம் செலுத்தும்போது, அலுவலக கவுண்ட்டர்களில் இனி ரூ.4 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் மின் கட்டண தொகையை செலுத்த முடியாது என்று அறிவித்துள்ளது. ரூ.4 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டுமானால் காசோலை, டிடி மூலம் மட்டுமே செலுத்த முடியும் என்று அறிவித்துள்ளது.

மேலும், யுபிஐ, நெட் பேக்கிங் மூலம் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது. முன்னதாக, 2 மாதத்தில்  2 மாதத்தில் 1,275க்கு மேல் யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர்களுக்கு ரூ.10 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணம் வந்தது. அவர்கள் தான் மின்சார கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி வந்தனர்.

காரணம்:

ஆனால், இனி 820 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் அனைவரும் ஆன்லைன் அல்லது டிடி, காசோலை மூலம் தான் பணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் கட்டண முறையை ஊக்கவிக்கவே மின்வாரியம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், அடுத்தடுத்த மாதங்களில் நேரடியாக பணம் செலுத்துவதை தவிர்க்க அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.  தமிழகத்தில் கடந்த ஜூலை 1ஆம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. வீடுகள், குடியிருப்புகள், கோயில்கள், சிறு,குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

அதே வேலையில் ஒரு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. அதன்படி, ஒரு யூனிட்டிற்கு ரூ.6.45, 500 முதல் 600 யூனிட் வரை ரூ.8.55, 601 முதல் 800 வரை பயன்படுத்துபவர்களுக்க ரூ.10.70 வசூலிக்கப்பட்டு வருகிறது. 1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே ஒரு யூனிட்டுக்கு ரூ.11.80 வசூலிக்கப்படுகிறது.

Also Read: கிண்டி, தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மின் தடை.. உங்க ஏரியா எப்படி? லிஸ்ட் இதோ..

மேலும், வீடுகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு ஒருமுறை மின் இணைப்பு கட்டணம் ரூ.1,070, மும்முனை இணைப்புக்கு ரூ.1,610 வசூலிக்கப்படுகிறது. இதோடு, மீட்டர், மின் இணைப்பு பெட்டி பழுது, இணைப்பை வேறு இடத்திற்கு மாற்றுதல் ஆகியவற்றுக்கு ஒருமுனை இணைப்புக்கு ரூ.1,070, மும்முனை இணைப்புக்கு ரூ.1,610 வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News