5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

EB Bill: கரண்ட் பில் கட்ட போறீங்களா? இனி ரொக்கமாக செலுத்த முடியாது.. மின்வாரியம் அதிரடி!

மின்சார கட்டணம் செலுத்தும்போது, அலுவலக கவுண்ட்டர்களில் இனி ரூ.5 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் மின் கட்டண தொகையை ரொக்கமாக செலுத்த முடியாது என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது.

EB Bill: கரண்ட் பில் கட்ட போறீங்களா? இனி ரொக்கமாக செலுத்த முடியாது.. மின்வாரியம் அதிரடி!
மின் கட்டணம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 21 Aug 2024 10:31 AM

மின்வாரியம் அதிரடி: மின்சார கட்டணம் செலுத்தும்போது, அலுவலக கவுண்ட்டர்களில் இனி ரூ.5 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் மின் கட்டண தொகையை ரொக்கமாக செலுத்த முடியாது என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இந்த மின் கட்டணத்தை மக்கள் மின்வாரிய அலுவலகங்களில் மற்றும் ஆன்லைன் மூலமும் செலுத்தி வருகின்றனர். மின்வாரிய இணையதளம், ஜிபோ, போன்பே, ஆன்லைன் செயலி மூலம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக மின்வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, மின்சார கட்டணம் செலுத்தும்போது, அலுவலக கவுண்ட்டர்களில் இனி ரூ.5 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் மின் கட்டண தொகையை ரொக்கமாக செலுத்த முடியாது என்று அறிவித்துள்ளது.

ரூ.5 ஆயிரத்திற்கு மேல் மின்கட்டணம் செலுத்த வேண்டுமானால் காசோலை, டிடி மூலம் மட்டுமே செலுத்த முடியும். அதே நேரத்தில் ஆன்லைனில் கட்டணம் செலுத்த எந்தவித கட்டுப்பாடும் இல்லை. மேலும், யுபிஐ, நெட் பேக்கிங் மூலமும் மின் கட்டணத்தை செலுத்தலாம் என்றும், மத்திய அரசின் பீம் (BHIM) செயலி மூலம் கட்டணம் செலுத்தினால் சில சமயங்களில் ஒன்று முதல் மூன்று சதவீதம் வரை சலுகை வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

Also Read: ”காசெல்லாம் வேணாம் சார்” மகன் படித்த அரசுப் பள்ளி.. இலவசமாக கட்டடப் பணி செய்த தந்தை.. மதுரையில் நெகிழ்ச்சி!

முன்னதாக, 2 மாதத்தில் 1,275க்கு மேல் யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர்களுக்கு ரூ.10 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணம் வந்தது. அவர்கள் தான் மின்சார கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி வந்தனர். ஆனால், இனி 820 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் அனைவரும் ஆன்லைன் அல்லது டிடி, காசோலை மூலம் தான் பணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் கட்டண முறையை ஊக்கவிக்கவே மின்வாரியம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

காரணம் என்ன?

கடந்த ஆண்டு மட்டும் மின்சார வாரியம் அனைத்து விதமான கட்டணங்களை சேர்த்து மொத்தம் ரூ.60,505 கோடி வசூல் செய்தது. இதில் ஆன்லைனில் மட்டும் ரூ.50,217 கோடி வசூலாகியது. மத்திய அரசின் உத்தரவுப்படி, ரூ.20,000க்கு மேலான பரிவர்த்தனை ரொக்கமாக பெற கூடாது. எனவே, தமிழக மின்வாரியம் முதலில் ரூ.20,000 மேல் ரொக்கம் பெறக்கூடாது என்று அறிவித்தது.  அதன்பின், ரூ.10,000 என குறைக்கப்பட்டது. தற்போது, டிஜிட்டர் பரிவர்த்தனையை அதிகரிக்க ரூ.5,000 மேல் நேரடியாக ரொக்கமாக செலுத்த முடியாது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. இனிமேல், ஜிபே, போன்போ, வாட்ஸ் அப், செயலி மூலம் தான் ரூ.5,000 மேல் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Latest News