Covai: ஆம்புலன்ஸ் முதல் நாய் வரை.. யானையை விரட்ட கோவை விவசாயிகள் செய்யும் புது விஷயம்!
Elephant Issue : கோவை அருகே விவசாயிகள் நாய் குரைக்கும் சத்தம், தேனீக்கள் சத்தம், ஆம்புலன்ஸ் சைரன் ஒலிப்பது போன்ற பதிவு செய்யப்பட்ட சத்தங்களை எழுப்பி யானைகளை விரட்டியடித்துள்ளனர். தகவல் அறிந்த வனத்துறையினர் பொதுமக்கள் மற்றும் வனத்துறையினரிடம் யானைகளை விரட்ட முயற்சிக்க வேண்டாம் என்று வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.
யானையை விரட்டும் விவசாயிகள் : கோவையில் விளைநிலங்களில் ஊடுருவும் காட்டு யானைகள் அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதால் அங்குள்ள மக்கள் பீதியில் வீட்டிற்குள் தஞ்சமடைந்துள்ளனர். யானைகள் ஊடுருவுவதைத் தடுக்க, விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை காட்டு யானைகள் நாசம் செய்வதைத் தடுக்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டுள்ளனர். ஏற்கனவே சோலார் கம்பி வேலிகள், அகழிகள் போன்று யானைகளை விரட்ட பல்வேறு முயற்சிகள் எடுத்தும் பலனளிக்காத நிலையில், யானைகள் தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் விவசாயிகள் பல புதிய வழிமுறைகளை கையாளத் தொடங்கியுள்ளனர். இதில் நாய் குரைக்கும் சத்தம், ஆம்புலன்ஸ் சைரன்களின் சத்தம் மற்றும் தேனீக்களின் சத்தம் ஆகியவற்றைப் கொண்டு யானைகளை விரட்டியுள்ளனர். சிறுமுகை வனப்பகுதிக்கு உட்பட்ட லிங்காபுரம், கந்தவயல், கந்தையாறு, உளியூர் ஆகிய கிராமங்களில் அடிக்கடி யானைகள் அட்டகாசம் செய்வதால், இப்பகுதிகளில் இருந்து விவசாயிகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் தீபந்தங்களை கையில் ஏந்தியபடியே அச்சத்தில் செல்கின்றனர்.
யானைகள் வருவதை தடுப்பதற்காக நிலத்தின் உரிமையாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், யானைகள் பண்ணைக்குள் புகுந்தால் அவற்றை விரட்டியடிக்கும் வகையில், பதிவு செய்யப்பட்ட அபாயகரமான ஒலியுடன் தங்கள் ஒலிபெருக்கிகளை இயக்கி யானைகளை விரட்டுகின்றனர்.
Also Read: கொடைக்கானலில் துவங்கியது 61-வது மலர் கண்காட்சி… நுழைவு கட்டணம் உயர்வு!
யானைகள் பெரும்பாலும் ஓய்வு எடுப்பதற்காகவே வனப்பகுதிக்குள் வருகின்றன, விவசாய நிலங்களை அனைத்து யானைகளும் தாக்குவது கிடையாது. ஒரு சில யானைகள் அதுவும் பழக்கப்பட்ட யானைகள் மட்டுமே பயிர்களை தாக்குகின்றன. வனத்துறையினர் அவர்களை விரட்டி விடுகின்றனர்,’ என, லிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எஸ்.மாரிமுத்து தெரிவித்தார். இதனிடையே, விளைநிலங்களுக்குள் வரும் காட்டு யானைகளை விரட்ட முயற்சிக்க வேண்டாம் என்றும், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“தங்கள் குடியிருப்பு பகுதிகள் அல்லது விவசாய நிலங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்ட முயல்பவர்கள் எந்த நடவடிக்கை எடுத்தாலும், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாகுபலி என்ற யானை, மேட்டுப்பாளையத்தில் உள்ள நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து சமயபுரம் சாலையைக் கடந்து கல்லாறு வனப்பகுதிக்கு வழக்கமாக பயணிக்கிறது, அந்த வழியாக செல்லும் மக்கள் அதை புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து வருவது அவர்களுக்கு மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். மேலும்ம் விளைநிலங்களுக்குள் வரும் காட்டு யானைகளை விரட்ட முயற்சிக்க வேண்டாம் என்றும், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.