5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Minister Ponmudi: பொன்முடிக்கு நெருக்கடி.. விடாது துரத்தும் ED.. கோடி கணக்கில் சொத்துகள் முடக்கம்!

திமுக மூத்த தலைவரும், அமைச்சருமான பொன்முடியின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. குவாரிகளில் செம்மண் அள்ளிய வழக்கில் ரூ.14.21 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பொன்முடியின் மகனும், முன்னாள் எம்.பியான கவுதம சிகாமணிக்கு செந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

Minister Ponmudi: பொன்முடிக்கு நெருக்கடி.. விடாது துரத்தும் ED.. கோடி கணக்கில் சொத்துகள் முடக்கம்!
பொன்முடி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Jul 2024 21:27 PM

திமுக மூத்த தலைவரும், அமைச்சருமான பொன்முடியின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. குவாரிகளில் செம்மண் அள்ளிய வழக்கில் ரூ.14.21 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பொன்முடியின் மகனும், முன்னாள் எம்.பியான கவுதம சிகாமணிக்கு செந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றதும் அக்கட்சியின் மூத்த தலைவரான பொன்முடி உயர்க்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இவருக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால், அவரது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவிகள் பறிக்கப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் இறுதியில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், அவர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.

Also Read: ‘தமிழ் புதல்வன் திட்டம்’… யார் யாருக்கு மாதம் ரூ.1,000.. தமிழக அரசு வெளியிட்ட முக்கியம் அறிவிப்பு

இதற்கிடையில், விழுப்புரத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளி அரசுக்கு ரூ.28 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக பொன்முடி, அரவது மகனும், முன்னாள் எம்.பியுமான கவுதம சிகாமணி உள்ளிட்டோர் 7 பேர் 2012ஆம் ஆண்டு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் என்பவர் இறந்த நிலையில், அரசு தரப்பு சாட்சிகளாக 67 பேர் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தான் அமைச்சர் பொன்முடியின் அசையா மற்றும் அசையும் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, ”அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு இருக்கிறது. அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளிய வழக்கில் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது அவர் சிறையில் உள்ளார். இந்த சூழலில், அளவுக்கு அதிமாக செம்மண் அள்ளிய வழக்கில் அமலாக்கத்துறை மற்றொரு அமைச்சருக்கு நெருக்கடியை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

Latest News