Erode East By Election: 2 ஆண்டுகளில் 2வது முறை இடைத்தேர்தல்.. கவனம் ஈர்க்கும் ஈரோடு கிழக்கு தொகுதி!

Erode East Constituency: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானதை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Erode East By Election: 2 ஆண்டுகளில் 2வது முறை இடைத்தேர்தல்.. கவனம் ஈர்க்கும் ஈரோடு கிழக்கு தொகுதி!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

Updated On: 

15 Dec 2024 12:03 PM

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (76) சென்னையில் நேற்று காலாமானார். இவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட உள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இளங்கோவனின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இளங்கோவனின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

2 ஆண்டுகளில் 2வது முறை இடைத்தேர்தல்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானதை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

2008ல் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 2011, 2016 மற்றும் 2021ல் மூன்று சட்டசபை தேர்தல்களையும், 2023ல் ஒரு இடைத்தேர்தலையும் சந்தித்துள்ளது. பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வெ.கி.சம்பத். இவரது மகன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவர், மத்திய இணையமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.

இவரது மூத்த மகன் ஈவெரா. 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் தாமா இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா போட்டியிட்டார். இந்த தேர்தலில் 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டது.  அதன்படி, இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.

Also Read : மதுரை சிறையில் ரூ.1.63 கோடி மோசடி.. சிக்கிய 3 அதிகாரிகள்.. அதிரடி காட்டிய போலீஸ்!

கவனம் ஈர்க்கும் ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை தோற்கடித்து இளங்கோவன் 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானதை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றிடமாகி விட்டது.

எனவே, இதனை நிரப்ப ஈரோடு கிழக்கு தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். வரும் பிப்ரவரி மாதத்தில் டெல்லி சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இத்துடன் சேர்த்து பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக இடைத்தேர்தலை ஆணையம் நடத்தும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து மூத்த அதிகாரி கூறுகையில், “இளங்கோவன் மரணம் குறித்த அறிக்கை, மாநில தேர்தல் கமிஷனுக்கும், மத்திய தேர்தல் கமிஷனுக்கும் அனுப்பி வைக்கப்படும். ஒரு எம்எல்ஏ தனது பதவிக்காலத்தில் இறந்துவிட்டால் ஆறு மாதங்களுக்குள் புதிய எம்எல்ஏவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதி உள்ளது. தற்போதைய திமுக ஆட்சியின் பதவிக்காலம் முடிய இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. எனவே, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விரைவில் மற்றொரு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும்” என்றார்.

Also Read : வன்கொடுமை செய்து சிறுவன் கொலை.. பகீர் வாக்குமூலம்.. கோவில்பட்டியில் ஷாக்!

தமிழக சட்டப்பேரவைக்கு 2026ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மக்கள் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள் என்பது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரதிபலிக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, இந்த தொகுதியில் பலமுனைப்போட்டி நிலவும் சூழல் உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்டவை களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோபம் வரும்போது அழுகை வருவது ஏன் - அறிவியல் கூறுவது என்ன?
எந்த பிரச்சனை உள்ளவர்கள் காபி குடிக்கக்கூடாது..?
அதிகளவில் உப்பு சேர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!
புடவையில் சொக்க வைக்கும் நடிகை மாளவிகா மோகனன்