ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு என்னாச்சு? நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!
E. V. K. S. Elangovan Hospitalized: தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஈவிகேஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரமணாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளார். இவரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஈவிகேஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரமணாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளார். இவரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 78 வயதான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையும் மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். தொடர்ந்து, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடடந்த காங்கிரஸ் நிகழ்ச்சிகளிலும், பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், நேற்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று மதியம் 12.30 மணியளவில் தமிழக முதல்வரும் மு.க.ஸ்டாலின் ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை எப்படி இருக்கு என்பது குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். அப்போது இவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உடன் இருந்தார். இவரை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையும் ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு செல்வப்பெருந்தகை பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ஏற்கனவே ஈவிகேஎஸ் இளங்கோவன் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவருக்கு உடல்நல பிரச்னை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் நானும், முதல்வரும் ஸ்டாலினும் நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து மருத்துவரிடம் விசாரித்தோம்.
Also Read : நாளை உருவாகும் ஃபெங்கல் புயல்.. 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்களில்?
நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
அவர் மீண்டும் குணம் அடைந்து வருவார். வரும் 9ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் அவரது குரலை கேட்பதற்கு தமிழக மக்கள், நாங்களும் ஆவலோடு இருக்கிறோம். அவர் மீண்டும் மக்கள் பணிக்கு திரும்புவார். மருத்துவர்களும் அவரை கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பேஸ்மேக்கர் கருவி வைத்திருக்கிறார்கள்.
இப்போது அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்து மீண்டு வருவார்” என்றார்.
Also Read : தாமதமாகும் ஃபெங்கல் புயல்.. கனமழை இருக்குமா? வானிலை சொல்லும் தகவல் என்ன?
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் ஈவெரா. இவர் கடந்தாண்டு காலமானார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், அவரை எதிர்த்து களமிறங்கிய அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.