5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 07 September 2024: தவெகவின் மாநாடு எப்போது? இன்றைய டாப் 10 செய்திகள்..

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். பரபரப்பான ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் அதனை நாம் பார்த்திருக்க இயலாது. எனவே இன்றைய நாளின் நிகழ்வை மிக சுருக்கமாக காணலாம். இந்த தொகுப்பில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி சிறப்பு பேருந்துகள்,  தி கோட் சிறப்பு காட்சிக்கு அனுமதி, காலாவதியான சுங்கச்சாவடிகள் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

Evening Digest 07 September 2024: தவெகவின் மாநாடு எப்போது? இன்றைய டாப் 10 செய்திகள்..
இன்றைய டாப் 10 செய்திகள்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 07 Sep 2024 22:38 PM

முக்கியச் செய்திகள்: இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். பரபரப்பான ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் அனைத்தையும் நாம் பார்த்திருக்க இயலாது. எனவே இன்றைய நாளின் நிகழ்வை மிக சுருக்கமாக காணலாம்.

தமிழ்நாடு:

  • நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு திட்டமிட்டபடி வரும் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சென்னைக்கு திரும்பிய மகாவிஷ்ணுவை விசாரணைக்காக காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் வரும் 20 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • வங்கக்கடலில் வரும் 9 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக்கக்கூடும். இதன் காரணமாக, இன்று முதல் 13 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்ன் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
  • கிருஷ்ணகிரியில் தற்கொலை செய்து உயிரிழந்த போலி என்சிசி பயிற்சியாளருக்கு உதவியதாக மாவட்ட என்சிசி ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • கல்விக்கு சம்பந்தம் இல்லாத நிகழ்ச்சிகளை அரசு அனுமதியின்றி நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
  • விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
  • தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு சென்றதால் சென்னை புறநகர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்தியா:

  • ஆனந்த் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு மும்பையின் லால்பாக்சா ராஜாவுக்கு (விநாயகருக்கு) 20 கிலோ எடையுள்ள தங்க கிரீடத்தை பரிசாக அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது .
  • உத்திரப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று மினிவேன் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 15 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தின் ஹத்ராஸ் என்ற இடத்தில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது.
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலங்கானாவுக்கு ரூ.3,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • மின்சார வாகனங்களுக்கு இனிமேல் மானியம் வழங்க தேவையில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
  • காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

உலகம்:

  • 2 நாள் அரசு பயணமாக அபுதாபி பட்டத்து இளவரசர் 9 ஆம் தேதி இந்தியா வருகை தர உள்ளார்.
  • பப்புவா நியூ கினியாவில் போப் ஆண்டவர் சுற்று பயணத்தை மேற்கொண்டுள்ளார். மேலும் அவர் மோதலை கைவிடும்படி பழங்குடியினரை கேட்டுக்கொண்டுள்ளார்.
  • ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளி வீரர்கள் இன்றி பூமியை வந்தடைந்தது.

விளையாட்டு:

  • 3வது டி 20 போட்டி: ஸ்காட்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
  • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஹாக்கி போட்டி நாளை முதல் தொடங்க உள்ளது.
  • ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Latest News