5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 1 November 2024 : 123% அதிக மழைக்கு வாய்ப்பு.. இன்றைய டாப் 10 செய்திகள்..

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 1 November 2024 : 123% அதிக மழைக்கு வாய்ப்பு.. இன்றைய டாப் 10 செய்திகள்..
இன்றைய டாப் 10 செய்திகள்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 01 Nov 2024 20:21 PM

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. நவம்பர் 2வது வாரத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடையும் என இந்திய் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள தேவிரம்மா மலை மீது சாமி தர்சனம் செய்ய ஒரே நேரத்தில்  ஏராளமான பக்தர்கள் மலை மீது ஏறிய நிலையில், பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.

தமிழ்நாடு

  • நவம்பர் 2வது வாரத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடையும் என இந்திய் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் அது ஆந்திரா மற்றும் தமிழ்நாடு நோக்கி நகரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
  • அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடிப்பு: சென்னையில் 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க நீதிமன்றம் காலை 6:00 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை நேரம் விதித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடித்ததாக 347 வழக்குகள் சென்னை காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.  விரிவாக படிக்க
  • தமிழ்நாடு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதாவது நவம்பர் 1 1956 ஆம் ஆண்டு இந்தியாவில் இருக்கும் மாகாணங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டு மாநிலன்ங்களாக உருவெடுத்தது. அந்த வகையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. விரிவாக படிக்க
  • தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், சொந்த ஊருக்கு சென்றுள்ள பொதுமக்கள் சென்னை திரும்பும்போது, கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க சிறப்பு ரயில்கள இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  விரிவாக படிக்க
  • தமிழகத்தில் நேற்று (அக்டோபர் 31) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், சென்னையின் காற்றின் தரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில், சென்னை மூன்று இடங்களில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரிவாக படிக்க

இந்தியா

  • கர்நாடகா மாநிலத்தில் உள்ள தேவிரம்மா மலை மீது சாமி தர்சனம் செய்ய ஒரே நேரத்தில்  ஏராளமான பக்தர்கள் மலை மீது ஏறிய நிலையில், பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். பக்தர்கள் சாரை, சாரையாக மலைமீது ஏறும் வீடியோ காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விரிவாக படிக்க

உலகம்: 

  • இப்போது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரில் வடகொரியாவும் குதித்துள்ளது. ரஷ்யாவிற்கு ஆதரவாக உக்ரைன் எல்லையில் 8000 முதல் 10 ஆயிரம் வடகொரிய வீரர்கள் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. அதே நேரத்தில், ரஷ்யா சார்பில் 11 ஆயிரம் வீரர்களை போருக்கு அனுப்ப வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் முடிவு செய்துள்ளதாக உக்ரைன் தனது உளவுத்துறையை மேற்கோள் காட்டி கூறியுள்ளது. விரிவாக படிக்க

விளையாட்டு

  • ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் 2025 சீசனில் பங்கேற்கும் 10 அணிகளும் தற்போது மொத்தமாக 47 வீரர்களை தக்கவைத்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துள்ளன.  விரிவாக படிக்க
  • ஐபிஎல் 2025க்கான தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் நேற்று வெளியிட்டன. தீபாவளியன்று வெளியான இந்த பட்டியலில் சில ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளிவந்தது. ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் போன்ற நட்ச்சத்திர வீரர்களை டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விடுவித்துள்ளன. விரிவாக படிக்க

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

Latest News