Evening Digest 10 July 2024: டாப் செய்திகள் இதோ! நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன? - Tamil News | | TV9 Tamil

Evening Digest 10 July 2024: டாப் செய்திகள் இதோ! நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன?

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 10 July 2024:  டாப் செய்திகள் இதோ! நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள்

Updated On: 

10 Jul 2024 21:11 PM

தமிழ்நாடு:

  • விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மாலை 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுவரை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 253 பேர் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர்கள் அன்னியூர் சிவா சொந்த ஊரான அன்னியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். பனையபூரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பாமக வேட்பாளர் அன்புமணி வாக்களித்தார்.
  • விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளில் 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.
  • தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், செங்கல்பட்டு மாணவி தோஷிதா லட்சுமி முதலிடம் பெற்றுள்ளார்.
  • தமிழ்நாட்டில் 2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 15ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: வாக்குச்சாவடியில் நின்ற பெண்ணுக்கு கத்திக்குத்து… விக்கிரவாண்டியில் பரபரப்பு!

இந்தியா:

  • விவாகரத்து பெற்ற பிறகும் இஸ்லாமிய பெண் முன்னாள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு உரிமை உண்டு என உச்ச நிதீமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. தெலங்கானாவைச் சேர்ந்த முகமது அப்துல் சமத் என்பவர் தொடர்ந்த வழக்கையும் நீதிமன்றத் தள்ளுபடி செய்துள்ளது.
  • உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் விரைவுச் சாலையில் இரண்டடுக்கு பேருந்து, பால் வேன் மீது மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
  • இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே இதுவரை 126 டிரோன்கள், 150 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • திரிபுராவில் ஒரே நேரத்தில் 800க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 47 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

உலகம்:

  • ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனீசி உடன் இருதரப்பு பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
  • மனித குலம் தற்போது சந்தித்து வரும் மிகப்பெரிய சவால்கள் காலநிலை மாற்றம் மற்றும் தீவிரவாதம் தான் என்றும் தீவிரவாதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கருதுவதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.
  • தென் அமெரிக்கா நாடான பெருவில் 22 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலையேற்ற வீரரின் உடல் பணியில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு:

  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா 6-3, 6-2 என எளிதில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
  • இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றது.
  • இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அலெக்ஸ் டி மினார் அறிவித்துள்ளார். இதன் மூலம் செர்பிய வீரர் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.

Also Read: தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. சென்னையில் எப்படி? வானிலை மையம் அலர்ட்!

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!