5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 11 September 2024: த.வெ.க மாநாடு அப்டேட்.. இன்றைய நாளின் டாப் செய்திகள்!

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள், தமிழக வெற்றி கழகம் முதல் மாநாடு, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணுவை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவ காப்பீடு  என பல முக்கிய நிகழ்வுகள் இன்று நடைபெற்றுள்ளது.

Evening Digest 11 September 2024: த.வெ.க மாநாடு அப்டேட்..  இன்றைய நாளின் டாப் செய்திகள்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 11 Sep 2024 23:17 PM

முக்கியச் செய்திகள்: இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள், தமிழக வெற்றி கழகம் முதல் மாநாடு, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணுவை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவ காப்பீடு  என பல முக்கிய நிகழ்வுகள் இன்று நடைபெற்றுள்ளது.

தமிழ்நாடு

  • முகூர்த்த நாள் மற்றும் தொடர் விடுமுறை நின்னுட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
  • தமிழக வெற்றி கழகம் முதல் மாநாடு தொடர்பான தேதியை நாளை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்கிறார்.
  • திருநெல்வேலியில் பள்ளிக்கு அரிவாள் கொண்டு வந்த மாணவன் உட்பட 3 பேர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை 480 அதிகரிக்கப்பட்டுள்ளது தேருவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • விஜய் கட்சி ஆறு மாதம் தான் தாங்கும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடுமையான விமர்சனம் செய்துள்ளார். மேலும் யார் அரசியலுக்கு வந்தாலும் திமுக பயப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணுவை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலிசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
  • திருவள்ளூரில் விரைவில் 150 ஏக்கரில் திரைப்பட நகர் அமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • விவாகரத்து தொடர்பாக ஜெயம் ரவி எடுத்தது அவரின் தனிச்சையான முடிவு என மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • சின்ன சேலம் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில் அவரும் அவரது மனைவியும் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர்.
  • மதுபோதையில் தாக்குதல் நடத்தியதாக பாடகர் மனோவின் மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • பெட்ரோல் டீசல் வெளியே லிட்டருக்கு ரூபாய் 14 குறைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • அரசு விழாவில் பங்கேற்க வந்த கே.பி.முனுசாமியை தடுத்த திமுகவினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  • மதுவிலக்கை அமல்படுத்த திமுக முன்வர வேண்டும் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா: 

  • 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • சிறந்த சேவைக்காக 15 செவிலியர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கௌரவித்துள்ளார்.
  • சீக்கியர் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவின் சீக்கிய அமைப்பினர் அவரது வீட்டில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
  • குடும்பத் தலைவருக்கு மாதம் ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
  • ஹரியானா சட்டசபை தேர்தலில் ஜுலானா தொகுதியில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
  • நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் விதமாக ராகுல் காந்தி செயல்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
  • பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
  • உத்தரப்பிரதேசத்தில் தொடரும் ஓநாய் தாக்குதல் சம்பவம் – 11 வயது சிறுமி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • ஆந்திராவில் மினி லாரி கவிழ்ந்ததில் ஏழு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உலகம்:

  • நைரோபியில் விமான நிலையத்தை அதானி நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் விமான சேவை பாதிக்கப்பட்டது.
  • ஈராக்கில் அமெரிக்க ராணுவ தளத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
  • ஆசிய சுற்றுப்பயணத்தின் இறுதி கட்டமாக சிங்கப்பூர் வந்தடைந்தார் போப் பிரான்சிஸ்.
  • காசாவில் இஸ்ரேல் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.
  • வியட்நாம் புயலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்ததால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

விளையாட்டு:

  • பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் போது நடைபெற்ற சம்பவத்தில் பிடி உஷாவிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என வினேஷ் போகத் குற்றம் சாட்டியுள்ளார்.
  • தொடரும் மழை காரணமாக நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது.
  • இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரின் மூலம் நாட்டிற்கு ரூபாய் 11,637 கோடி பொருளாதாரம் எடுத்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Latest News