5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 11 October 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 11 October 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
முக்கியச் செய்திகள்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 Oct 2024 19:17 PM

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு:

  • தென்தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 16ஆம் தேதி ஒருசில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனம பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. விரிவாக படிக்க
  • மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறுதிப்போட்டியின் நடுவில் இரு அணி வீரர்களும் மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  விரிவாக படிக்க
  • முரசொலி செல்வத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
  • ஆயுத பூஜை தொடர் விடுமுறையொட்டி, சென்னையில் இருந்து 3,120 பேருந்துகள் இயக்கப்பட்டன என்றும் 1.62 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
  • வரும் 16ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியிருந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியா:

  • டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த ரத்தன் டாடாவின் தம்பி ஆவார். நோயல் டாடா 40 ஆண்டுகளுக்கு மேலாக டாடா குழுமத்தில் பல்வேறு துறைகளில், பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். விரிவாக படிக்க
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு கோவிந்தா..கோவிந்தா.. என பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். விரிவாக படிக்க
  • மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பயிற்சியின்போது பீரங்கி குண்டு வெடித்து அக்னி வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
  • ஹரியானாவில் புதிய பாஜக அரசின் பதவியேற்பு விழா வரும் 15ஆம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜகவின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோல் கலந்து கொள்வார்கள்.

Also Read: தமிழகத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை அலர்ட்… எந்தெந்த மாவட்டங்கள்?

உலகம்:

  • லெபனானில் உள்ள ஐ.நா அமைதிப் படையில் உள்ள 600 இந்திய வீரர்களின் பாதுகாப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது. லெபனான் எல்லையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐ.நா. அமைதி படை வீரர்கள் காயம் அடைந்துள்ளது பெரும் பதற்றத்தை கிளப்பியுள்ளது.  விரிவாக படிக்க
  • 19வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு லாவோஸில் நடந்தது. ஆசியான் நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். விரிவாக படிக்க
  • அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த நிஹான் ஹிடாங்கியோ என்ற அமைப்புக்கு 2024ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு உலக நாடுகளை அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விரிவாக படிக்க

Also Read: மதுரை முதலமைச்சர் கோப்பை போட்டி.. வீரர்களிடையே மோதலால் பரபரப்பு..

விளையாட்டு:

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை 2024ன் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் இப்போது இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுவரை இலங்கை உள்பட இரண்டு அணிகள் 2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளன. விரிவாக படிக்க

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

Latest News