5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 12 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். பரபரப்பான ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் அதனை நாம் பார்த்திருக்க இயலாது. எனவே இன்றைய நாளின் நிகழ்வை மிக சுருக்கமாக காணலாம். இந்த தொகுப்பில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானர், சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல், மதுரை விடுதியில் தீ விபத்து போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

Evening Digest 12 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
முக்கியச் செய்திகள்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Sep 2024 21:41 PM

முக்கியச் செய்திகள்: இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) உடல் நலக்குறைவால் காலமானார். முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சிதம்பரம் அருகே கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். பாஜகவில் இருந்து விலகி அதிகமுவில் மீண்டும் மைத்ரேயன் இணைந்துள்ளார்.

தமிழ்நாடு:

  • பாஜகவில் இருந்து விலகி அதிகமுவில் மீண்டும் மைத்ரேயன் இணைந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மைத்ரேயன் அதிமுகவில் இணைந்துள்ளார்.
  • பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூல் லிப் எனும் போதைப்பொருளுக்கு அதிகமாக அடிமையாகி உள்ளனர். இதனால், கூல் லிப்பை ஏன் தடை செய்யக் கூடாது என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
  • பராமரிப்பு பணிகள் காரணமாக விழுப்புரம் – திருப்பதி விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
  • மதுரையில் பெண்கள் விடுதியில் ஃபிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
  • பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
  • வார விடுமுறை, முகூர்த்த நாள், மிலாடி நபி விடுமுறைகளை முன்னிட்டு நாளை முதல் சென்னயில் இருந்து 955 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
  • மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் அரும் 18 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • சிதம்பரம் அருகே கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை, பெண்கள் உள்பட 5 பேர் பரிதாப உயிரிழந்தனர்.

Also Read: களையிழந்த ஓணம் பண்டிகை.. தமிழ்நாடு பூ வியாபாரிகளுக்கு நஷ்டம்.. அச்சச்சோ!

இந்தியா:

  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) உடல் நலக்குறைவால் காலமானார்.
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
  • மத்திய பிரதேசத்தில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
  • ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், இவரது சொத்து மதிப்பு விவரங்களி வெளியாகின.
  • மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
  • வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பான புதிய முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
  • குஜராத்தில் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம்:

  • பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கதால் சிலருக்கு சிறிது காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
  • காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.நா ஊழியர்கள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஐ.நா கண்டனம் தெரிவித்ததோடு, காசாவில் நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐ.நா. தலைவர் கூறியுள்ளார்.
  • அமெரிக்க சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் தமிழக அசு ரூ.500 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • பாகிஸ்தானில் இதுவரை 5 பேருக்கு குரங்கு அம்பை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • உக்ரைனுக்கு மேலும் 700 மில்லயன் டாலரை நிதியுதவியாக அமெரிக்கா வழங்கியுள்ளது.

Also Read: சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு பாருங்க!

விளையாட்டு:

  • இந்திய ஜாம்பவான்கள் பாகிஸ்தானுக்கு சென்று நாம் விளையாட வேண்டும் என பிசிசிஐக்கு அறிவுரை கொடுக்க வேண்டும் என மொயின் கான் தெரிவித்துள்ளார்.
  • சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் 58 ரன்கள் அடித்தால் விராட் கோலி புதிய உலக சாதனை படைப்பார். கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் 27,000 ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை படைப்பார்.
  • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

Latest News