5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 12 October 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 12 October 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
முக்கியச் செய்திகள் (picture credit: PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Oct 2024 20:24 PM

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. வரும் 15 ஆம் தேதி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும். சென்னை பூந்தமல்லி அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ரூ.2,236 கோடி மதிப்பிலான எல்லை சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை இன்று ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு

  • யூடியூபர் சவுக்கு சங்கர் நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த அடைப்பை சரி செய்ய ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்யப்பட்டு ஸ்டண்ட் வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரிவாக படிக்க
  • வரும் 15 ஆம் தேதி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. விரிவாக படிக்க
  • திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்லும் ஏர் இந்தியா விமானம் நேற்று வட்டமடித்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். விரிவாக படிக்க
  • சென்னை பூந்தமல்லி அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயரத்தில் நிரந்தர கொடிக்கம்பம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
  • வரும் திங்கட்கிழமை 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதாவது அக்டோபர் 14 ஆம் தேதி பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க

Also Read: டாடா அறக்கட்டளைக்கு புதிய தலைவர் நியமனம்.. யார் இந்த நோயல்?

இந்தியா 

  • ஹரியானாவில் புதிய முதல்வராக மீண்டும் நயாப் சிங் சைனி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி அக்டோபர் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரிவாக படிக்க
  • குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலையின்
    கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் தொழிலாளர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
  • நாடு முழுவதும் ரூ.2,236 கோடி மதிப்பிலான எல்லை சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை இன்று ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
  • நாட்டு நலனுக்காக அச்சுறுத்தல் ஏற்பட்டால் எந்தவொரு பெரிய நடவடிக்கையும் எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Also Read: ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு.. விசாரணை நடத்த சிவில் ஏவியேஷனுக்கு உத்தரவு..

உலகம் 

  • ஈரான் முழுவதும் சைபர் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு பின்னணியில் இஸ்ரேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஈரானின் மூன்று துறைகள் சைபல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் உச்ச கவுன்சில் ஆஃப் சைபர்ஸ்பேஸின் முன்னாள் செயலாளர் ஃபிரூசாபாடி கூறியுள்ளார்.  விரிவாக படிக்க
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிரச்சார பாடலை உருவாக்கியுள்ளார். நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பிரச்சார பாடல் கமலா ஹாரிஸுக்கு ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரிவாக படிக்க
  • இஸ்ரேலுக்கு உதவினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் தனது அரபு அண்டை நாடுகளுக்கும், வளைகுடாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கும் மோதல் போக்கு உச்சத்தில் இருக்கும் நிலையில், ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. விரிவாக படிக்க

விளையாட்டு

  • 3வது டி20 கிரக்கெட்டில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார் இந்திய அணி வீரர் சஞ்ச சாம்சன். 10 வது ஓவரில் தொடர்ந்து 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடித்தார் சஞ்ச சாம்சன்.

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

Latest News