Evening Digest 13 November 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

இன்றைய முக்கியச் செய்திகள்: இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அதாவது, சென்னையில் மருத்துவருக்கு கத்திக்குத்து, ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை ரூ.1000, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம், வயநாடு இடைத்தேர்தல், ஜார்க்கண்ட் முதற்கட்ட தேர்தல் போன்ற செய்திகளை விரிவாக பார்க்கலாம்.

Evening Digest 13 November 2024: இன்றைய டாப் செய்திகள்... உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள்

Updated On: 

13 Nov 2024 20:06 PM

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. நவம்பர் 13ஆம் தேதியான இன்று என்ன நடந்தது என்பதை பார்ப்போம். வரும் ஜனவரி மாத்திற்கு பிறகு ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்து மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு

  • வரும் ஜனவரி மாத்திற்கு பிறகு ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விரிவாக படிக்க
  • சென்னையில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று கடுமையாக சாடியுள்ளார்.  விரிவாக படிக்க
  • சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்து மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர் மருத்துவர் பாலாஜி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
  • வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. விரிவாக படிக்க
  • எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுவிழா நடத்துவது விந்தையாக உள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
  • சென்னையில் மருத்துவர் மீது கத்துக்குத்தி நடத்திய விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read : ”யாருக்கும் பாதுகாப்பு இல்லை” மருத்துவருக்கு கத்திக்குத்து.. கொதித்தெழுந்த விஜய்!

இந்தியா

  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டிருந்த பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் பர்ஸ் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரிவாக படிக்க
  • குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரா மாநிலத்தின் நிதியை எடுத்து டெல்லிக்கு அனுப்பிவிடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். மேலும், போலியான அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை காட்டி மக்களின் நம்பிக்கையை உடைத்தது மட்டுமின்றி, அம்பேத்கரையும் ராகுல் காந்தி இழுவுபடுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.
  • கேரளா மாநிலம் வயநாடு இடைத்தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ளது.  இதில் 64.27 சதவீத வாக்குகள் பதிவாக உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உலகம்

  • அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்துக்கொண்டிருந்த நிலையில், டிரம்புக்கு ஆதரவாக களத்தில் குதித்தார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். எக்ஸ் தளத்தில் மட்டுமன்றி, டிரம்ப் உடனான மேடை பேச்சுகளிலும் அவர் பங்கேற்றார். விரிவாக படிக்க
  • உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் மிகப்பெரிய நாடு அமெரிக்கா, ஆனால் கியேவுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் உதவி வழங்கியதற்காக பிடென் நிர்வாகத்தை டிரம்ப் விமர்சித்தார். ரஷ்ய ஆளில்லா விமானம் தெற்கு நகரமான மைகோலைவ் மீது தாக்குதல் நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். விரிவாக படிக்க

Also Read : கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர்.. உடல்நிலை எப்படி இருக்கு? வெளியான வீடியோ

விளையாட்டு

  • இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான பார்டர் – கவாஸ்கர் டிராபியில் விளையாடுகிறது. இந்த தொடர் முதன்முறையாக 1996ம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. விரிவாக படிக்க
  • இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று (நவம்பர் 13) நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. விரிவாக படிக்க

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

 

ABC ஜூஸில் இவ்வளவு பிரச்னைகள் உள்ளதா?
பாதாம் பருப்பை எவ்வாறு உட்கொள்வது சரியானது?
தினமும் காலையில் சிறிது எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ