Evening Digest 14 November 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
இன்றைய முக்கியச் செய்திகள்: இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அதாவது, தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னையில் எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழப்பு, துணை முதல்வர் உதயநிதி ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளாத கனிமொழி எம்.பி. போன்ற முக்கியச் செய்திகளை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் எம்.பி கனிமொழி புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. வரும் 2028ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து டொனால்டு டிரம்ப் சூசமாக பேசியுள்ளார்.
தமிழ்நாடு
- சென்னை குன்றத்தூரில் வீட்டில் எலித் தொல்லையை கட்டுப்படுத்த வைக்கப்பட்ட மருந்தால் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தின் நெடி காற்றில் பரவியதால் முச்சுதிணறி 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். விரிவாக படிக்க
- தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் எம்.பி கனிமொழி புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியது. விரிவாக படிக்க
- லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது. விரிவாக படிக்க
- சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி தான் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கும் வீடியோவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விரிவாக படிக்க
- 2026 தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என்றும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியா
- வாட்ஸ் ஆப் செயலியை தடை செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
- ராஜஸ்தான் இடைத்தேர்தலில் துணை ஆட்சியரை தாக்கியததாக கூறி சுயேட்சை வேட்பாளரை போலீசார் கைது செய்ய முயன்றபோது அங்கு வன்முறை வெடித்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
- மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
Also Read : “நலமாக இருக்கிறேன்”.. கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி பேட்டி!
உலகம்
- வரும் 2028ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து டொனால்டு டிரம்ப் சூசமாக பேசியுள்ளார். தனது ஆதரவாளர்கள் மத்தியில் அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிடுவது குறித்து பேசியது அமெரிக்க அரசியலில் பேசும் பொருளாக மாறியுள்ளது. விரிவாக படிக்க
- அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தற்போதைய அதிபரான ஜோ பைடனை சந்தித்து வாழ்த்து பெற்றதோடு பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். விரிவாக படிக்க
Also Read : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு.. கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..
விளையாட்டு
- ரஞ்சி டிராபியின் பிளேட் குரூப் போட்டியில் அருணாச்சல பிரதேசம் மற்றும் கோவா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இரண்டு பெரிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. முதல் தர கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் இரண்டு பேட்ஸ்மேன்கள் முச்சதம் அடிப்பது இது இரண்டாவது முறையாகும். விரிவாக படிக்க
- ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித் போன்ற முன்னாள் கேப்டன்கள் தலைமையில் அந்தந்த அணிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றாலும், இவர்களின் தலைமையில் கீழ் அணிகள் குறைந்த வெற்றி சதவீதத்தை பெற்றுள்ளன. விரிவாக படிக்க
இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.