5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 16 October 2024: ஒரே நாளில் இவ்வளவு நிகழ்வுகளா? – இன்றைய டாப் 10 செய்திகள்!

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை மட்டுமல்லாமல், வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை வழங்குகிறோம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 16 October 2024: ஒரே நாளில் இவ்வளவு நிகழ்வுகளா? – இன்றைய டாப் 10 செய்திகள்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 16 Oct 2024 20:35 PM

இன்றைய முக்கிய நிகழ்வுகள்: அக்டோபர் 16 ஆம் தேதியான இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம். இதில் உள்ளூர் முதல் உலகம் வரை நடந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. சென்னையில் இருந்து நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை மக்கள் வாழ்க்கை, நைஜீரியாவில் வெடித்து சிதறிய டேங்கர் லாரி, தெலங்கானாவில் நடந்த விபத்து என பல நிகழ்வுகள் இதில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு

  • சென்னையில் கனமழை நின்ற நிலையில் மெட்ரோ ரயில்கள் நாளை முதல் வழக்கம்போல வார நாட்களுக்கான அட்டவணையின்படி இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் சேவைகள் எப்போதும் போல காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பயணங்களைச் சரியாக திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
  • நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது சென்னையில் வெள்ளச்சேதம் ஏற்படுவதை தடுக்க அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டி கொடுத்த பரிந்துரையின் பேரில் பணிகளை செய்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் 25 முதல் 30 சதவிகித பணிகள் பாக்கியுள்ளது. வெள்ளத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையின் புறநகர் பகுதி மக்களுக்கும் விரைவில் நிரந்தர தீர்வு அளிக்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். விரிவாக படிக்க
  • புதுச்சேரியில் 8 ஆண்டுகளுக்குப் பின் ரேஷன் கடைகள் வரும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தீபாவளிக்கு இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என முதலமைச்சர் என்.ஆர்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். விரிவாக படிக்க
  • காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பாட்டது. இதனிடையே காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காற்று கடக்கும் பகுதி வடக்கு நோக்கி இருக்கும் என்பதால் சென்னைக்கு அதிகனமழை இருக்காது என தெரிவிக்கப்பட்டதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.விரிவாக படிக்க

இந்தியா

  • ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா இன்று ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்றார். 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  விரிவாக படிக்க
  • தெலங்கானாவில் நடைபெற்ற சாலை விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மேடக் மாவட்டத்தில் உள்ள சிவம்பேட்டையில் இன்று மாலையில் இந்த பயங்கர சாலை விபத்தானது நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் நான்கு பெண்களும் இரண்டு சிறுமிகளும் அடங்குவர். விரிவாக படிக்க
  • திருப்பதியில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்கு தரிசனத்துக்கு சென்றுள்ள பொதுமக்கள் பெருமளவில் அவதியடைந்துள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு  மண்டலம் ஆந்திரா அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கனமழை பெய்து வருகிறது.

உலகம் 

  • நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து சிதறிய விபத்தில் 90க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. லாரி விபத்தை சந்தித்த நிலையில் அதிலிருந்து கொட்டிய பெட்ரோலை எடுக்க மக்கள் கூடியுள்ளனர். அப்போது அதிக வெப்பம் காரணமாக திடீரென தீப்பிடித்து இந்த விபத்தானது நடந்துள்ளது. விரிவாக படிக்க
  • டெல்லியில் இருந்து சிக்காகோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அந்த விமானம் கனடாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து கனடா விமானப்படை விமானம் 191 பயணிகளை சிக்காகோ அழைத்துச் சென்றுள்ளது. இதே போல் மதுரை சிங்கப்பூர் இடையே இயக்கப்படும் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இரண்டு சிங்கப்பூர் போர் விமானங்கள் பாதுகாப்பாக விமானத்துடன் சென்றது.

விளையாட்டு 

  • இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் இன்று தொடங்குவதாக இருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
  • ஐசிசி வெளியிட்டுள்ள கால் ஆப் ஃபேம் பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் வீரர் அலைஸ்டர் குக், இந்தியாவின் நீத்து டேவிட், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரை இணைத்து கௌரவப்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீராங்கனைகளை கௌரவப்படுத்தும் வகையில் ஐசிசி இதனை செய்து வருகிறது.
  • தென்னாப்பிரிக்கா அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான பங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest News