Evening Digest 16 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன? - Tamil News | evening digest 16th september 2024 top news and important happenings in tamil news | TV9 Tamil

Evening Digest 16 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

Updated On: 

16 Sep 2024 21:38 PM

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 16 September 2024: இன்றைய டாப் செய்திகள்... உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள்

Follow Us On

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். திமுக – விசிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்றும் விரிசல் வந்தாலும் எதிர்கொள்ள தயார் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அகமதாபத் மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி இன்று பயணித்தார். ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தலிபான்கள் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு:

  • பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு நாளை முதல் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
  • திருவண்ணாமலை அருகே கார், பேருந்து ஒன்றைக்கொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது விபத்து ஏற்பட்டிருக்கிறது.
  • தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
  • 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுவேன். என் பாதை என் பயணம் தனி என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
  • திமுக – விசிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்றும் விரிசல் வந்தாலும் எதிர்கொள்ள தயார் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
  • ரூ.400 கோடி மதிப்பில் மொக காலணி உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 28ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.
  • தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (16.09.2024 மற்றும் 17.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: தமிழ்நாட்டில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை.. எந்தெந்த மாவட்டங்களில்? லிஸ்ட் இதோ!

இந்தியா:

  • நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழக துறைமுகங்கள் முக்கிய பங்காற்றி இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
  • அகமதாபத் மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி இன்று பயணித்தார். இந்த பயணத்தின்போது மெட்ரோ ரயில் ஊழியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
  • கேரளா மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2 பேர் உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் மாஸ்க் கட்டாயமாக அணிய வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
  • இந்தியா கூட்டணி ஒரே நாடு ஒரே தேர்தலை முற்றிலும் எதிர்க்கிறது என்றும் தற்போதைய அரசியலமைப்பில் ஒரே நாள் ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
  • ராகுல் காந்தியன் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சமாக பரிசாக தருகிறேன் என்று சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.
  • வந்தே மெட்ரோ ரயில் சேவைக்கு நமோ பாரத் ரேபிட் ரெயில் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கெஜ்ரிவால் கூறிய நிலையில், அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாதா, அமைச்சர்கள் அதிஷி, கோபால் ராய் உள்ளிட்டவர்களின் பெயர்கள் லிஸ்ட்டில் உள்ளன.

உலகம்:

  • ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தலிபான்கள் தடை விதித்துள்ளது.
  • இந்தியா – மாலத்தீவு இடையே இருந்த தவறான புரிதல்கள் தற்போது தீர்த்து வைக்கப்பட்டு விட்டன என்று மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் தெரிவித்துள்ளார்.
  • சர்வதேக கோல்ப் கிளப்புக்கு சென்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கிச் நடத்தினர். அவர் உடனே பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
  • நான் பலமுறை கூறியது போல் அமெரிக்காவில் அரசியல் வன்முறைகளுக்கு இடமில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Also Read: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. டைமிங் நோட் பண்ணிக்கோங்க பயணிகளே!

விளையாட்டு:

  • டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் 1 சுற்றில் இந்தியா அணி தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணி தோல்வியை தழுவியதால் 4-0 என்ற கணக்கில் சுவீடன் வெற்றி பெற்றது.
  • இந்திய அணியை வெற்றி பெற விட மாட்டோம் வங்கதேச கேப்டன் சாண்டோ தெரிவித்துள்ளார். கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இந்தியா – வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version