Evening Digest 17 October 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன? - Tamil News | evening digest 17th october 2024 top news and important happenings in tamil news | TV9 Tamil

Evening Digest 17 October 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 17 October 2024: இன்றைய டாப் செய்திகள்... உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள்

Updated On: 

17 Oct 2024 19:38 PM

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சென்னையில் மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் உணவு சாப்பிட்டுள்ளார். அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட இந்திய குடியுரிமை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு

  • வரும் 2026 தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் யார் வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் எனக்கே சீட் கிடைக்காமல் போகலாம் எனவும் வனத்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். விரிவாக படிக்க 
  • சென்னையில் மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் உணவு சாப்பிட்டுள்ளார். மேலும், தூய்மை பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  விரிவாக படிக்க
  • நாளை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
  • மலேசியாவில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ஆப்பிரிக்க வனப்பகுதியில் உள்ள அபூர்வ வகை 52 பச்சோந்திகள், 4 கருங்குரங்குகள் ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விரிவாக படிக்க
  • அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆயுள் தண்டனைக் கைதியை முன்கூட்டியே விடுவிக்க அரசின் பரிந்துரையை நிராகரித்தற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
  • சேலம் மாவட்டத்தில் நாளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம் நடைபெற உள்ளது.
  • தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்து இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: என்னாது பொன்முடிக்கு சீட் இல்லையா? அவரே சொன்ன தகவல்.. திமுகவின் திட்டம் என்ன?

இந்தியா

  • ரயில் டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான காலத்தை 60 நாட்களாக குறைத்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ரயிலில் முன்பதிவு செய்ய 120 நாட்களில் இருந்த நிலையில், 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க 
  • 2024ஆம் ஆண்டின் ஃபெமின் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிகிதா போர்வால். இவருக்கு கடந்த ஆண்டு வெற்றி பெற்ற நந்தின் குப்தா மற்றும் நேஹா தூபியா ஆகியோர் பட்டத்தை வழங்கி கௌரவித்தனர். விரிவாக படிக்க
  • தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. அவர் 10 நவம்பர் 2024 அன்று ஓய்வு பெறுவார். இத்தகைய சூழ்நிலையில், அவர் தனது வாரிசை பரிந்துரைத்துள்ளார். தலைமை நீதிபதி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பெயரை முன்மொழிந்துள்ளார். விரிவாக படிக்க
  • அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட இந்திய குடியுரிமை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • ஹரியானா முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

உலகம்

  • காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தற்போது இந்த குற்றச்சாட்டுகள் தகவல் அடிப்படையிலானது என்றும் ஆதாரம் இல்லை என்றும் அதிரடி கருத்தை கூறியிருக்கிறார். விரிவாக படிக்க
  • இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் கடலோர நகரமான லதாகியாவில் தீ பரவியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அங்கு இருக்கும் ஆண்டி மிஸைல் சிஸ்டம் அந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க

Also Read: ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்.. என்ன தெரியுமா?

விளையாட்டு

  • லண்டனில் நடந்த உலக செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா தனது வழிகாட்டியும், 5 முறை உலக சாம்பியனுமான விஸ்வநாதன் வீழ்த்தினார்.  விஸ்வநாதன் ஆனந்தை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தார் பிரக்ஞானந்தா. விரிவாக படிக்க
  • நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி மற்றும் வில்லியம் ஓ’ரூர்க் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் பெங்களூருவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 45 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.  விரிவாக படிக்க

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

பான் இந்திய நடிகை இந்த குழந்தை...
நாளை தியேட்டரில் என்னென்ன படங்கள் ரீலீஸ் தெரியுமா?
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏன் வயிற்று உப்பசம் ஏற்படுது தெரியுமா?
தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...