Evening Digest 17 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன? - Tamil News | evening digest 17th september 2024 top news and important happenings in tamil news | TV9 Tamil

Evening Digest 17 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

Updated On: 

17 Sep 2024 22:05 PM

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 17 September 2024: இன்றைய டாப் செய்திகள்... உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள் (Photo Credit: PTI)

Follow Us On

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள அவரது நினைவு இடத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். இன்றைக்கு கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி என்று கூட கேட்க முடியாது நிலை உள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.  ஜம்மு காஷ்மீரில் முதல் கட்டமாக 24 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழ்நாடு:

  • திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள அவரது நினைவு இடத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். பெரியார் திடலில் பூ மாலை வைத்து, பூக்களை தூவி விஜய் மரியாதை செலுத்தினார்.
  • பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • நம்முடைய இலக்கு 2026ஆம் ஆண்டும் நடக்கும் சட்டப்பேரவை தேர்தல். இப்படி ஒரு வெற்றியை எந்த கட்சியும் பெறவில்லை என்பதை வரலாறு சொல்ல வேண்டும் என்று திமுக பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
  • இன்றைக்கு கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி என்று கூட கேட்க முடியாது நிலை உள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (17.09.2024 மற்றும் 18.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  • நிபா வைரஸ் எதிரொலியாக தமிழ்நாடு எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Also Read: “கீரிம் பண்ணுக்கு எவ்வளவு வரி என கேட்க முடியல” திமுக பவள விழாவில் கலாய்த்த ஸ்டாலின்!

இந்தியா:

  • ஜம்மு காஷ்மீரில் முதல் கட்டமாக 24 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
  • மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை இன்று நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார்.
  • டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்த உள்ள நிலையில், டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா தேர்வு செய்யப்பட்டுள்ளார். எல்.ஏ-க்கள் கூட்டத்தில், இன்று நடந்த டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • டெல்லியில் அதிஷிக்கு முதலமச்சர் பதவி கொடுப்பதா என்று ஆளுங்கட்சி எம்.பி ஸ்வாதி மாலிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
  • பிரதமர் மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகம்:

  • யாகி சூறாவளி புயல் பாதித்த மியான்மரில் இதுவரை 77 பேர் காணாமல் போகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
  • பெருவில் பரவி வரும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • ரஷியாவில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரஷ்ய மக்களுக்கு அதிபர் புதின் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • நியூயார்க்கில் உள்ள சுவாமி நாரயண கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசப்படுத்தியதற்கு இந்திய கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Also Read: சென்னையில் முக்கிய இடங்களில் நாளை மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு பாருங்க!

விளையாட்டு:

  • ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024ன் ஹாக்கி இறுதிப்போட்டியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, சொந்த மண்ணில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 5வது முறையாக கோப்பை கைப்பற்றி தங்கப் பதக்கத்தை வென்றார்.
  • 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை முதல் ஆடவர் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை வெற்றியாளர்களுக்கு சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது.

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

 

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version