Evening Digest 18 October 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன? - Tamil News | evening digest 18th october 2024 top news and important happenings in tamil news | TV9 Tamil

Evening Digest 18 October 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 18 October 2024: இன்றைய டாப் செய்திகள்... உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள்

Updated On: 

18 Oct 2024 19:27 PM

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை கொடூராக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வரும் 22,23ஆம் தேதிகளில் பிரதமர் மோடி ரஷியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு

  • தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். விரிவாக படிக்க
  • நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை கொடூராக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களை பிரம்பால் கண்மூடித்தனமாக தாக்கியதோடு மட்டுமின்றி, காலணியாலும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.  விரிவாக படிக்க
  • இந்தி பேசாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். விரிவாக படிக்க
  • தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 53 சதவீதமா உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அகவிலைப்படி 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விரிவாக படிக்க
  • தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  விரிவாக படிக்க
  • மாமல்லபுரத்தில் மர்ம பொருள் வெடித்து பழைய காவலர் குடியிருப்பு கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அதிர்வினால் அருகில் உள்ள குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியதால் பரபரப்பான சூழல் நிலவியது. விரிவாக படிக்க

இந்தியா

  • நாட்டில் குழந்தை திருமண சட்டத்தை திறம்பட செயல்படுத்த உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. குழந்தை திருமணங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதி டி.ஓய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. விரிவாக படிக்க
  • ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி இன்று முதலமைச்சர் உமர் அப்துல்லா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வரும் 22,23ஆம் தேதிகளில் பிரதமர் மோடி ரஷியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • ஈஷா யோகா மையத்திற்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை மாநில அரசு விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Also Read: “ஆபிஸ் வரலைன்னா வேலையை விட்டு போயிடுங்க” ஊழியர்களுக்கு வார்னிங் கொடுத்த அமேசான்!

உலகம்

  • இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஒரு ஆண்டு காலமாக கடும் போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஹமாஸ் தலைவரும், அக்டோபர் 7 ஆம் தேதி தாக்குதலின் முக்கிய புள்ளியுமான யாஹ்யாவை கொலை செய்துவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. விரிவாக படிக்க
  • காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவர், யாஹ்யா சின்வார் கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. யாஹ்யா சின்வாரின் கடைசி நிமிட வீடியோ மற்றும் அவர் இறந்த பிறகு அவரது உடல் மீட்கப்படும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. விரிவாக படிக்க

விளையாட்டு

  • நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா வித்தியாசமான முறையில் அவுட்டாகி வெளியேறினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் படுவேகமாக வைரலாகி வருகிறது. விரிவாக படிக்க
  • நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இன்னிங்ஸின் 37 வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா வீசிய ஒரு பந்து, ரிஷப் பண்ட்டின் முழங்காலில் நேரடியாகத் தாக்கியது. அதன்பிறகு, பண்ட்டுக்கு காயம் ஏற்பட்டது. விரிவாக படிக்க

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

தினசரி சாப்பிடும் காபி, டீயில் சர்க்கரை சேர்க்கவில்லை என்றால் என்ன ஆகும்?
பப்பாளி பழத்துடன் இந்த உணவு வகைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது!
அசத்தலான புதிய அம்சங்களை அறிமுகம் செய்த யூடியூப்!
பப்பாளியை அதிகமாக எடுத்துக்கொள்வதை ஏன் தவிர்க்க வேண்டும் தெரியுமா?