5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 19 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 19 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
முக்கியச் செய்திகள்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 19 Sep 2024 21:01 PM

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை பாஜகவால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகுவார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி அளித்துள்ளார். திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு, மீண் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டது ஆய்வில் உறுதியாகி உள்ளது. இலங்கை அதிபர் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு:

  • அனைவரும் மதுவிலக்கை ஆதரித்தால் தமிழ்நாட்டில் ஏன் மதுக்கடைகள் திறந்திருக்கின்றன என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
  • சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை கொலை செய்த மணி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
  • சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்விட்டதாக நீதிமன்றத்தில் அறநிலையத்துறை குற்றச்சாட்டி உள்ளது.
  • திமுகவில் நடைபெற்றது பவள விழா அல்ல, உதயநிதிக்கு முடி சூட்டுவதற்கான ஆரம்ப விழா என்று தமிழிசை சௌந்ததரராஜன் விமர்சித்துள்ளார்.
  • 10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகுவார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி அளித்துள்ளார்.
  • தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  • ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை பாஜகவால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • இரவு நேரத்தில் ஆன்லைன் கேம் விளையாடுவதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. இதன் மூலம் குழந்தைகள் இரவில் கேம் விளையாடுவது தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது-

Also Read: வாட்டி வதைக்கும் வெயில்.. இன்னும் 4 நாட்களுக்கு மோசமாக இருக்கும்.. வானிலை மையம் தகவல்!

இந்தியா:

  • பிரதமர் மோடி வரும் 21ஆம் தேதி முதல் வரும் 23ஆம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியது.
  • திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு, மீண் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டது ஆய்வில் உறுதியாகி உள்ளது.
  • பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கொல்கத்தா ஆர்.ஜி மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் மருத்துவப்பதிவு ரத்து செய்யப்பட்டது.
  • ஹரியானாவில் அனைத்து பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. ஹரியானாவில் வரும் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதால் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
  • டெல்லி புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்ட அதிஷி, வரும் 21ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

உலகம்:

  • அமெரிக்கா வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக புதிய கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையை குறைப்பதாகவும், வெளிநாட்டு தொழிலாளர் விதிகளை கடுமையாக்குவதாகவும் கனடா அரசு அறிவித்துள்ளது.
  • இலங்கை அதிபர் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் ரணில் விக்மரசிங்கே, எதிர்க்கட்சி சார்பில் சஜித் பிரேமதாசா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
  • லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் பெய்ரூட் நகரின் தெற்கு புறநகர் பகுதிகளில் வாக்கு டாக்கிகள் வெடித்ததில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

Also Read: சென்னையில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா தெரியுமா? செக் பண்ணுங்க!

விளையாட்டு:

  • இந்தியா vs வங்கதேசம் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜடேஜாவுடன் 150 ரன்களுக்கு மேல் தனது பார்ட்னர்ஷிப்பை அமைத்தது மட்டுமின்றி அடுத்த 50 பந்துகளில் சதத்தையும் எட்டினார்.
  • அடுத்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலாம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • தென் ஆப்பிரக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

Latest News