Evening Digest 30 September 2024: நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது.. இன்றைய டாப் 10 செய்திகள்.. - Tamil News | evening digest 1st october 2024 top news and important happenings in tamil news | TV9 Tamil

Evening Digest 30 September 2024: நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது.. இன்றைய டாப் 10 செய்திகள்..

Published: 

30 Sep 2024 19:58 PM

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 30 September 2024: நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது.. இன்றைய டாப் 10 செய்திகள்..

இன்றைய டாப் 10 செய்திகள்

Follow Us On

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

 

தமிழ்நாடு:

  • பண்டிகை காலத்தை முன்னிட்டு 108 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ள. தீபாவளி மற்றும் சத் பண்டிகைக்காக 12,500 பெட்டிகள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2024-2025 நிதியாண்டில் மட்டும் இதுவரை 5,975 சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. விரிவாக படிக்க
  • ரூ.40 கோடி சொத்துக்காக தேனியைச் சேர்ந்த தம்பதியினரை கடத்திக் கொடூரமாக கொலை செய்து ஒருநாள் முழுவதும் காரிலேயே சடலங்களை வைத்து தருமபுரியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் தடங்கம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் ஆண், பெண் சடலங்கள் கத்திக் குத்து காயங்களுடன் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரிவாக படிக்க
  • தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை சின்னம் இடம்பெற விவகாரத்தில் தேர்தல் தேர்தல் ஆணையம் தலையீடாது என்று பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு பதில் அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியின் யானை உருவம் இடம்பெற்றது குறித்து தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி புகார் அளித்தது. அதாவது, தவெக கொடியில் யானை உருவம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி புகார் அளித்தது. விரிவாக படிக்க..
  • குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. விரிவாக படிக்க.. 
  • பிரதமர் மோடி மதுரை வரிச்சியூர் அருகே வசித்து வரும் ஆசிரியை சுபஸ்ரீ பற்றி பேசினார். அந்நிகழ்ச்சியில் தான் வசிக்கும் இடத்தில் மூலிகை பூங்காவை உருவாக்கி தனக்கும் தான் சார்ந்த சமூகத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பை அவர் அளித்து வருவதாக பிரதமர் மோடி பாராட்டினார். இதனால் ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் பிரதமரே பாராட்டிய சுபஸ்ரீ யார் என்பதை அறிந்து கொள்வதில் தான் உள்ளது. விரிவாக படிக்க..
  • உதயம் திரையரங்கம் அருகே தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் அருகில் இருக்கும் அம்பேத்கர் நகர் பகுதியில் சேர்ந்த ஐயப்பன் என்கிற இளைஞர் தனது வீட்டின் அருகில் இருக்கக்கூடிய குழந்தை மற்றும் செல்ல பிராணியுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மது போதையில் இருந்த அவர் நிலை தடுமாறி மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். விரிவாக படிக்க.. 
  • அக்டோபர் 1 ஆம் தேதியான நாளை, சென்னையில் முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி,  அய்யப்பந்தாங்கல், தரமணி மற்றும் சேலையூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. விரிவாக படிக்க.. 

Also Read: சேலையூர், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை.. எந்தெந்த ஏரியா? லிஸ்ட் இதோ..

இந்தியா:

  • பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு கவுரவம் கிடைத்துள்ளது. மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. 70வது தேசிய திரைப்பட விருது விழாவையொட்டி, அக்டோபர் 8ஆம் தேதி மிதுன் சக்ரவர்த்திக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு மிதுன் சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். விரிவாக படிக்க
  • உத்தரப்பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையின் மீது ஏறி உடற்பயிற்சி செய்த இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அதுதொடர்பாக அம்மாநில காவல்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சச்சின் என்ற இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இருந்து இந்த வீடியோ வெளியாகியிருந்தது. விரிவாக படிக்க
  • லட்டு விவகாரத்தில் ஆந்திரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியிடம் பதில் அளித்த உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய், “நீங்கள் அரசியல் சாசனப் பதவியை வகிக்கும் போது, ​​கடவுளை அரசியலில் இருந்து விலக்கி வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். விரிவாக படிக்க
  • பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை என் உயிர் போகாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியிருந்தார். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.  விரிவாக படிக்க
  • நாளை நான்கு மணி நேரம் திருப்பதி கோயிலில் விஐபி உள்ளிட்ட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று திருமலை திருப்பதி கோயிலாகும். உலகின் பணக்கார கடவுளாகவும் திருப்பதி கோயில் கருத்தப்படுகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு லடசக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் மேற்கொள்வர்கள். விரிவாக படிக்க

உலகம்:

  • நேபாளத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 170 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேபாளத்தில் கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இதுவரை 170 பேர் உயிரிழந்த நிலையில், பலரும் காணாமல்  போயுள்ளனர். விரிவாக படிக்க
  • அமெரிக்காவில் சூறாவளியால் பாதிக்கப்பட்டு இதுவரை 110 உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சூறாவளி புயலால் ரூ.7,96,002 கோடி அளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

விளையாட்டு:

  • சீனா சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் காலிறுதி போட்டியில், ஜானிக் சினெர் – ஜிரி லெஜெக்கா மோதினர். இதில் ஜானிக் சினெர் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

 

கருப்பு திராட்சை Vs பச்சை திராட்சை : எது பெஸ்ட்?
எண்ணெய் இல்லாமல் சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?
காபி குடிப்பதால் உடலில் இவ்வளவு பிரச்னைகள் ஏற்படுமா?
வெறும் வயிற்றில் ஜூஸ் குடித்தால் இத்தனை பிரச்சனைகள் வருமா?
Exit mobile version