Evening Digest 20 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன? - Tamil News | evening digest 20th september 2024 top news and important happenings in tamil news | TV9 Tamil

Evening Digest 20 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

Updated On: 

20 Sep 2024 21:07 PM

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 20 September 2024: இன்றைய டாப் செய்திகள்... உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள்

Follow Us On

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. திமுக அரசின் பொய் வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள அதிமுக எப்போதும் தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநல அரசிடம் அறிக்கை கேட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு:

  • திருப்பதி லட்டு விவகாரத்தை நாட்டின் பொது பிரச்னையாக கொண்டு செல்வது சரியல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
  • திருச்சியில் ரூ.17.60 கோடி மதிப்பில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • பழனி பஞ்சாமிரதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்து நெய் பயன்படுத்துவதாக வதந்தி பரப்பப்படுவடுதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. பழனி பஞ்சாமிரதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (20.09.2024 மற்றும் 21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  • பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • திமுக அரசின் பொய் வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள அதிமுக எப்போதும் தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Also Read: ”அவரே பாவம்.. தெளிவா சொல்லிட்டாரு” ரஜினியிடம் துணை முதல்வர் பதவி குறித்து கேள்வி… உதயநிதி கலகல!

இந்தியா:

  • ஜம்மு காஷ்மீல் பேருந்து மலைப்பாதையில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • கோயில்களில் நந்தினி செய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கர்நாடக அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பதில் லட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் நிலையில், கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநல அரசிடம் அறிக்கை கேட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
  • கடவுளின் பெயரால் அரசியல் நடத்தப்படுகிறது என்று திருப்பதி லட்டு விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
  • திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தேவஸ்தானம் அறிக்கை அளிக்க வேண்டும் முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். திருப்பதில் லட்டிலி விலக்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக மாநில அரசு குற்றச்சாட்டியுள்ளது.
  • உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. இதனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரலை பாதிக்கப்பட்டது.
  • அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருநாட்டு உறவு குறித்து பேச்சு வார்த்தை நடத்த பிரதமர் மோடி நாளை அமெரிக்க பயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
  • கொல்கத்தாவில் மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில், நாளை முதல் பணிக்கு திரும்புவதாக தகவல்க வெளியாகி உள்ளது.

உலகம்:

  • லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா அமைப்பு ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த சில நாட்களே ஹிஜ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கு மோதல் நிலவுகிறது.
  • பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பாதுகாப்புப்படையினர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
  • இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

Also Read: சென்னையில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா தெரியுமா?

விளையாட்டு:

  • இந்தியா – வங்கதேசம் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
  • இந்திய வங்கதேசம் இடையிலான முத டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 56 ரன்கள் அடித்தன் மூலம் சொந்த மண்ணில் முதல் 10 இன்னிங்சில் 750 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

பல வகையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பனீர்..!
ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்க உதவும் உணவுகள்!
உணவு சாப்பிட்ட உடன் இனிப்பு சாப்பிடலாமா?
சாப்பிட்ட உடனே டீ குடிக்கிறீங்களா? இதை படிங்க
Exit mobile version