5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 21 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 21 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
பிரதமர் மோடி (Picture Credit: PTI)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 21 Sep 2024 21:20 PM

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமு நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இரண்டாவது பொதுக் குழு கூட்டம் இன்று நடந்தது.சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டெல்லியின் முதலமைச்சராக அதிஷி மெர்லினா பதவியேற்றார்.

தமிழ்நாடு:

  • விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதி கோரி விழுப்பு மாவட்ட கண்காணிப்பாளரிடம் த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார்.
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
  • பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராக்கை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்தவர் என்று கூறப்படும் ரவுடி அப்பு என்பவர் கைதாகி உள்ளார்.
  • சென்னை தேனாம்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இரண்டாவது பொதுக் குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் கட்சியின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
  • ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதெல்லாம் எவ்வளவு ஆபத்தானது என்றும் இந்தியாவுக்கு அது தேவையில்லை பொதுக் குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
  • சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் நாளை (செப்டம்பர் 21 ஞாயிற்றுகிழமை) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
  • மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  • ஊழியரை கொடுமைபடுத்திய விவகாரத்தில் நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட ஆறு பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
  • இந்தியாவிலேயே முதல்முறையாக (டபுள் டக்கர்) ஒரே தூணில் இரண்டு அடுக்கு மெட்ரோ இரயில் பாலம் சென்னையில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: தேதி குறித்த விஜய்.. போலீஸிடம் அனுமதி கேட்ட புஸ்ஸி ஆனந்த்.. களைகட்டும் த.வெ.க மாநாடு!

இந்தியா:

  • ராகுல் காந்திக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கு காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
  • டெல்லியின் முதலமைச்சராக அதிஷி மெர்லினா பதவியேற்றார். இதன் மூலம் டெல்லியின் முதலமைச்சராக பதவியேற்ற மூன்றாவது பெண் அதிஷி ஆவார்.
  • திருப்பதியில் லட்டு சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், உத்தர பிரதேசம், ராஜஸ்தானில் கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா விமான படையின் புதிய தளபதியாக அமர் பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பல்வேறு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மணி நேரம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
  • பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான பயப்படுகிறது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
  • ஹேக் செய்யப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் போராட்டம் நடத்திய மருத்துவர்கள் 42 நாட்களுக்கு பணிக்கு திரும்பியுள்ளனர்.

உலகம்:

  • மூன்று நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்கா சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • இலங்கையில் அதிபர் தேர்தல் இன்று மாலை முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • இலங்கையில் நாளை மறுநாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை இலங்கை அரசாங்கம் விசேச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • காசாவின் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Also Read: ஊழியரை கொடுமைபடுத்திய விவகாரம்.. நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு..

விளையாட்டு:

  • இந்தியா – வங்கசேத இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்களை குவித்தது.
  • சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திற்கு 515 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

 

Latest News