5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 22 October 2024: டானா புயல் அப்டேட்.. தீபாவளி ஸ்பெஷல் பேருந்துகள்.. இன்றைய டாப் 10 செய்திகள்!

அக்டோபர் 22 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய செய்திகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம். டானா புயல் காரணமாக  28 ரயில்கள் ரத்து, மாமல்லபுரத்தில் காவலாளியை தாக்கிய 3 பேர் கைது, நாமக்கலில் முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பேச்சு, இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட பல்வேறு விதமான செய்திகள் இடம்பெற்றுள்ளது. 

Evening Digest 22 October 2024: டானா புயல் அப்டேட்.. தீபாவளி ஸ்பெஷல் பேருந்துகள்.. இன்றைய டாப் 10 செய்திகள்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 22 Oct 2024 21:17 PM

இன்றைய முக்கிய நிகழ்வுகள்: அக்டோபர் 22 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய செய்திகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம். டானா புயல் காரணமாக  28 ரயில்கள் ரத்து, மாமல்லபுரத்தில் காவலாளியை தாக்கிய 3 பேர் கைது, நாமக்கலில் முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பேச்சு, இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட பல்வேறு விதமான செய்திகள் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு

  • டானா புயல் காரணமாக அக்டோபர் 23 முதல் 26 வரை வட மாநிலங்களுக்கு செல்லும் 28 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாடு புதுச்சேரியில் இருந்து கிளம்பும் 17 ரயில்களும் அடங்கும். டானா புயல் ஒரிசா இடையே 24 ஆம் தேதி கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
  • செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நோ என்ட்ரியில் செல்ல முயன்ற காரை தடுத்து நிறுத்திய காவலாளியை தாக்கிய வீடியோ வைரலான நிலையில் இதுதொடர்பாக மாமல்லபுரம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி காவலாளியை தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிரபுதாஸ், சண்முகப்பிரியா மற்றும் கீர்த்தனா ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.விரிவாக படிக்க
  • சென்னை மழை வெள்ளத்தின் போது பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு விருந்தளித்த நிகழ்வில் நடைபெற்ற நெகிழ்ச்சியான சம்பவத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், தூய்மை பணியாளர்களில் ஒருவர் தன்னிடம் வந்து நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர் என தெரிவித்தார். இதைவிட எனக்கு பெரிய பாராட்டு என்ன இருக்கப்போகிறது என நெகிழ்ச்சியடைந்தார். விரிவாக படிக்க
  • குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது போன்ற வீடியோ வெளியிட்ட யூட்யூபர் இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இர்ஃபான் மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் நிவேதிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பிரசவம் நடைபெற்ற மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.விரிவாக படிக்க
  • தீபாவளி பண்டிகையொட்டி தமிழ்நாடு அரசின் அமுதம் பல்பொருள் அங்காடியில் 15 மளிகை பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் என்ற தொகுப்பு விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.499க்கு 15 பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். விரிவாக படிக்க
  • தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்ல விரும்புபவர்கள் பெருங்களத்தூர் தாம்பரம் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. அவர்கள் திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் வண்டலூர் வெளி சுற்றுவட்டச் சாலையை பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விரிவாக படிக்க

இந்தியா

  • பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் இன்று தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி ரஷ்யா சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் ரஷ்ய அதிபர் புதினுடன் இருநாட்டு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.விரிவாக படிக்க
  • வடகிழக்கு பருவமழை காரணமாக பெங்களூருவில் கனமழை பெய்து வரும் நிலையில் கிழக்கு பெங்களூருவில் உள்ள பாபுசபால்யா என்ற பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடுபாடுகளில் 17 பேர் சிக்கியதாக கூறப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரிவாக படிக்க
  • உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் காதலனை சந்தித்த திருமணமான பெண்ணை கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள. ரேபரேலி தொகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரிவாக படிக்க

உலகம்

  • ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான விவகாரத்திற்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்றிருக்கும் அவர் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியபோது இதனை தெரிவித்தார்.
  • லெபனானில் உள்ள மருத்துவமனை அருகே இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதால் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விளையாட்டு

  • நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுப்பதற்காகவே அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் குஜராத் அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest News