Evening Digest 24 October 2024: டானா புயல் முதல் விஜய்யின் மாநாடு வரை.. இன்றைய டாப் செய்திகள்! - Tamil News | evening digest 24th october 2024 top news and important happenings in tamil news | TV9 Tamil

Evening Digest 24 October 2024: டானா புயல் முதல் விஜய்யின் மாநாடு வரை.. இன்றைய டாப் செய்திகள்!

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 24 October 2024: டானா புயல் முதல் விஜய்யின் மாநாடு வரை.. இன்றைய டாப் செய்திகள்!

முக்கியச் செய்திகள்

Updated On: 

24 Oct 2024 19:58 PM

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் செல்லும் மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள டானா புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்க மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என லிபரல் கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு

  • தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய, மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தினை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இணைய வழி மலையேற்ற முன்பதிவு தளத்தை தமிழக அரசு இன்று துவங்கி வைத்து உள்ளது. விரிவாக படிக்க   
  • தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் செல்லும் மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலு செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். விரிவாக படிக்க
  • த.வெ.க மாநாடு அக்டோபர் 27, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்க உள்ளது. அதில் கட்சி தலைவர் விஜய் மாலை 6 மணிக்கு மேடையில் ஏறி இரவு 8 மணி வரை கூட்டத்தில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவாக படிக்க
  • நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க

Also Read: வயநாடு மக்களே என் தங்கச்சியை பாத்துக்கோங்க.. ராகுல்காந்தி நெகிழ்ச்சி!

இந்தியா

  • வங்கக் கடலில் உருவாகி உள்ள டானா புயல், தற்போது ஒடிசாவின் தென்கிழக்கு திசையில் நிலைக் கொண்டுள்ளது. இது தீவிர புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
  • இஸ்லாமிய ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்ளலாம் என்று மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் நான்கு மனைவியுடன் வாழ்வதற்கு இஸ்லாமிய தனிநபர் சட்டத்தில் உரிமை உள்ளது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
  • உத்தர பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்யும் என்று காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே கூறியுள்ளார்.
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
  • பெங்களூரில் அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

உலகம்

  • இந்தியா கனடாவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் சூழலில், கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என லிபரல் கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். வரும் 28ஆம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் எனவும் சொந்த கட்சி எம்.பிக்களே ஜஸ்டீன் ட்ரூடோவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். விரிவாக படிக்க
  • ரஷ்யாவின் கசான் நகரில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 2020ல் கால்வான் மோதலுக்குப் பிறகு இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த முதல் இருதரப்பு சந்திப்பு இதுவாகும். விரிவாக படிக்க

Also Read: பெங்களூருவில் கனமழை.. இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்!

விளையாட்டு

  • இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விரிவாக  படிக்க
  • இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். விரிவாக படிக்க

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

Related Stories
ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் 13!
அதிகளவில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்..?
இந்த ஹேண்ட்சம் சிறுவன் யார் தெரியுதா?
தங்க நிற உடையில் மின்னும் நடிகை பூஜா ஹெக்டே!