Evening Digest 25 July 2024 : கோவை, நெல்லை மாநகராட்சிகளுக்கு மேயர் தேர்தல் நடத்த அனுமதி … இன்றைய முக்கியச் செய்திகள்.. - Tamil News | evening digest 25 july 2024 top news headlines in tamil | TV9 Tamil

Evening Digest 25 July 2024 : கோவை, நெல்லை மாநகராட்சிகளுக்கு மேயர் தேர்தல் நடத்த அனுமதி … இன்றைய முக்கியச் செய்திகள்..

Updated On: 

25 Jul 2024 23:26 PM

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 25 July 2024 : கோவை, நெல்லை மாநகராட்சிகளுக்கு மேயர் தேர்தல் நடத்த அனுமதி … இன்றைய முக்கியச் செய்திகள்..

மாதிரி புகைப்படம்

Follow Us On

தமிழ்நாடு :

  • தற்போது காலியாக உள்ள கோயம்புத்தூட் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி மேயர்கள் பதவிக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்தகுமாரும், திருநெல்வேலி மேயராக பி.எம்.சரவணனும் பதவி வகித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவருக் கடந்த ஜூலை 3 ஆம் தேதி தங்களது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
  • இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் காதல் திருமணம் செய்துக்கொண்ட கார்த்திக்பாண்டி என்ற 26 வயது இளைஞரை, அந்த பெண்ணின் சகோதரர்கள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர். கார்த்திக்பாண்டியும், நந்தினியும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
  • தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையிக் சென்னை மேடவாக்கம் நெஞ்சாலையில் மேடவாக்கம் கூட் ரோடு முதல் வானுவம்பேட்டை வரையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
  • திருப்பூரை சேர்ந்த மலையப்பன் என்பவர் ஒரு தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் வழக்கம் போல நேற்று மாலை மாணவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது மலையப்பன் பள்ளி வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு ஸ்டேரிங் மீது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

உலகம் :

  • அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பை விட கமலா ஹாரிஸுக்கு ஆதரவு பெருகி வருவதாக சமீபத்திய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தை ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான இப்ஸோ உடன் இணைந்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டொனால்டு டிரம்பை விட கமலா ஹாரிஸுக்கு 2% அதிகமாக ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Mayor Election : கோவை, நெல்லை-க்கு மேயர் தேர்தல் நடத்த அனுமதி.. மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

பொழுதுபோக்கு :

  • சமீபத்தில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறை மாணவ, மாணவிகளாக கல்லூரி செல்லவுள்ள விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பரிசளித்து ஊக்கப்படுத்தும் விழா அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவகுமார், கார்த்தி, சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

வனிகம் :

  • தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. கடந்த சில நாட்களாக சரிவை கண்டு வந்த தங்கம் நேற்று அதிரடியாக கிராமுக்கு 60 ரூபாய் குறைக்கப்பட்டது. அந்த வகையில், நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920 க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 60 குறைந்து ரூ.6,490க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.55,560 ஆகவும் கிராமுக்கு ரூ. 6.495 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

விளையாட்டு :

  • நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இல்லாமல் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடும் அர்ஜென்டினா 2 கோல்கள் அடித்து போட்டியை 2-2 என சமன் செய்தது. ஆனால் இங்கிருந்துதான் மைதானத்தில் போட்டியை காண வந்திருந்த மொராக்கோ ரசிகர்கள் செய்த சம்பவத்தால் போட்டி நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கல்வி :

  • இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் சிறப்புப் பிரிவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 713 இடங்களுக்கான கலந்தாய்வில் 92 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர். இன்று (ஜூலை-25) முதல் 28 வரை நடைபெறவுள்ள சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் 9,547 இடங்களுக்கு 3,772 மாணவர்கள் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

தொழில்நுட்பம் :

  • சமீபத்தில் மோட்டோரோலா நிறுவனம், மோட்டோ G85, மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா மற்றும் மோட்டோரோலா ராஸ்ர் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ள இந்த புதிய மாடல் மொபைல் போன் மிகவும் மெல்லிய தோற்றத்துடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ஃபிலிப்கார்ட் மூலம் வாங்கிக்கொள்ளலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • ஆப்பிள் ஏர் டிராப் அம்சத்தை போலவே இன்டர்நெட் இல்லாமலே போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பகிரக்கூடிய அசத்தலான அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு மொபைல்களில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் , விரைவில் ஐபோன்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

இதையும் படிங்க : Shocking News : திடீர் மாரடைப்பு.. குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு உயிரிழந்த ஓட்டுநர்.. சோக சம்பவம்!

வைரல் :

  • பெண் ஒருவர் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ஏர் ஃப்ரையர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த பொருள் டெலிவரி செய்யப்பட்ட உடனே அதை ஆசை, ஆசையாக பிரித்து பார்த்துள்ளார். ஆனால் அவருக்கு அதில் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அந்த பெண் ஆர்டர் செய்த ஏர் ஃப்ரையர் பார்சலில் உயிருடன் ஒரு உடும்பு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
  • நொய்டாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், ஓலா உணவு டெலிவரி ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அப்போது உணவு டெலிவரி செய்யும் நவர் அவருக்கு போன் செய்து கூடுதலாக ரூ.10 தரும்படி கேட்டுள்ளார். முதலில் அதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர் பிறகு தருவதாக கூறியுள்ளார். இதற்கு பிறகு சுமார் 45 நிமிடங்களாக அந்த இளைஞர் உணவுக்காக காத்து கொண்டிருந்துள்ளார். அப்போது தான் அந்த உணவு டெலிவரி செய்யும் நபர், தான் ஆர்டர் செய்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை அந்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version