Evening Digest 25 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
Important News | உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் கிராமத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன், சாலையின் இடதுபுரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (25.09.2024 மற்றும் 26.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டாஸை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : கோலிவுட் சினிமாவின் டாப் நடிகை தான் இந்த சிறுமி… உங்களுக்கு தெரியுதா?
தமிழ்நாடு :
பள்ளிக்கல்வித்துறை தரப்பில் காலாண்டு தேர்வு நீடித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 6 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் 2 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் கிராமத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன், சாலையின் இடதுபுரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த 14 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விரிவாக படிக்க
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாநாட்டிற்கு பாதுகாப்பு கோரி மனு அளித்து, 4 நாட்கள் ஆகியும் இதுவரை விழுப்புரம் மாவட்ட காவல் துறையிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்பதால் மாநாடு மீண்டு தள்ளிபோக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரிவாக படிக்க
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (25.09.2024 மற்றும் 26.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விரிவாக படிக்க
பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியது மற்றும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் குண்டர் சத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தமிழக அரசு குண்டர் சட்டத்தை வாபச் பெற விருப்பம் தெரிவித்த நிலையில் சவுக்கு சங்கரின் தாய் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விரிவாக படிக்க
இதையும் படிங்க : நடிகர் விமலின் ‘சார்’ படத்திலிருந்து வெளியானது ‘புட்ட வச்ச’ பாடல் லிரிக் வீடியோ
இந்தியா :
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 6 மாவட்டங்களில் உள்ள 26 சட்டசபை தொகுதிகளில் 239 வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த 26 இடங்களில் 11 இடங்கள் ஜம்மு பிரிவிலும், 15 இடங்கள் காஷ்மீர் பகுதியிலும் உள்ளன. விரிவாக படிக்க
குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிம்மத் நகரில் இன்று காலை பெரும் விபத்து ஏற்பட்டது. அப்போது முன்னால் சென்ற லாரி மீது வேகமாக வந்த கார் மோதியது. விபத்தின் போது, காரின் வேகம் அதிகமாக இருந்ததால், காரின் பாதி லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேவேளையில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விரிவாக படிக்க
மத்திய பிரதேசத்தில் ஆடு மேய்க்க சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த தகவல் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய பிரதேசத்தின் சட்ட ஒழுங்கு குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. விரிவாக படிக்க
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் பன்றி கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் போர்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. விரிவாக படிக்க
பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடிகை அளித்த புகாரில் ஹர்ஷா சாய் தனது நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விரிவாக படிக்க
இதையும் படிங்க : AR Murugadoss: கோலிவுட் முதல் பாலிவுட் வரை… கலக்கும் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் பிறந்த நாள் இன்று
உலகம் :
மத யாத்திரை என்ற போர்வையில் ராஜ்யத்திற்கு வரும் பாகிஸ்தானிய பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து சவுதி அரேபியா கவலை தெரிவித்ததுடன், அவர்கள் வளைகுடா நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இஸ்லாமாபாத்தை கேட்டுக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
பொழுதுபோக்கு :
’லப்பர் பந்து’ படத்தில் விஜயகாந்த் பாடலை வைத்தது ஏன் என்பதற்கான காரணத்தை இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து தெரிவித்துள்ளார். அது தற்போது கோலிவுட் வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. விரிவாக படிக்க
இந்திய அளவில் சர்ச்சையான திருப்பதி லட்டு விவகாரத்தை வைத்து வேடிக்கையாக வீடியோ வெளியிட்டதற்காக பிரபல யூட்யூப் வலைத்தளமான பரிதாபங்கள் குழு மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். விரிவாக படிக்க
தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் தான் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகர் அசோக் செல்வன் விளக்கம் அளித்துள்ளார். விரிவாக படிக்க
இதையும் படிங்க : மீண்டும் கார் பந்தையத்தில் களமிறங்கும் அஜித்… வைரலாகும் தகவல்
ஆன்மீகம் :
துலாம் ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிகளில் முன்னேற்றங்களைக் காணலாம். விருச்சிக ராசிக்காரர்கள் அடிக்கடி பயணம் மற்றும் உடல்நலம் மற்றும் தொழில் சார்ந்த சவால்களை சந்திக்க நேரிடும். அக்டோபரில் எந்த எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன ராசிபலன் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். விரிவாக படிக்க
வணிகம் :
செப்டம்பர் 25 ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை ரூ.480 உயர்ந்து ரூ.56,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.60 உயர்ந்து ரூ.7,060-க்கு விற்பனையாகிறது. விரிவாக படிக்க
விளையாட்டு :
ஐபிஎல் அடுத்த சீசனுக்கான ஏற்பாடுகள் மிக விரைவில் தொடங்கவுள்ளது. பிசிசிஐ விரைவில் ஒரு அணி எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற விதியை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏலத்தின்போது ஒரு அணியால் 4 வீரர்கள் மட்டுமே வைக்க முடியும் என்ற விதி இருந்த நிலையில், வருகின்ற ஏலத்தில் இருந்து 5 வீரர்கள் தக்க வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. விரிவாக படிக்க