5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 25 October 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 25 October 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
முக்கியச் செய்திகள்
umabarkavi-k
Umabarkavi K | Published: 25 Oct 2024 19:44 PM

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. திறமையான இந்தியர்களுக்கான விசாவை ஜெர்மனி 90,000 ஆக உயர்த்தியுள்ளது என்று கூறினார். தொழிலதிபர் ரத்தன் டாடா, தன் வளர்ப்பு நாய் டிட்டோவை பராமரிப்பதற்கு தனியாக சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்.

தமிழ்நாடு

  • தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்றும், நாளையும் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது.  விரிவாக படிக்க
  • சென்னையில் 16 வயது சிறுமியை பெண் ஒருவர் கடத்தி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறுமியை திருமணம் செய்ய கடத்தி சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  விரிவாக படிக்க
  • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு அக்கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு 3வது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.  விரிவாக படிக்க
  • தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை என்றும் மைக் சரியாக வேலை செய்யாததால் பாடியவர்களின் குரல் கேட்கவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கட்சி பணிகளையும் ஆய்வு செய்வேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியா

  • டெல்லியில் நடந்த 18வது ஆசிய-பசிபிக் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, திறமையான இந்தியர்களுக்கான விசாவை ஜெர்மனி 90,000 ஆக உயர்த்தியுள்ளது என்று கூறினார். கனடாவில் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைப்பதாக அந்நாட்டு அரசு கூறிய நிலையில், ஜெர்மனி இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. விரிவாக படிக்க
  • சமீபத்தில் காலமான தொழிலதிபர் ரத்தன் டாடா, தன் வளர்ப்பு நாய் டிட்டோவை பராமரிப்பதற்கு தனியாக சொத்துக்களை எழுதி வைத்துள்ளார். மேலும், தன்னிடம் நீண்ட காலமாக வேலை பார்த்த ராஜன் ஷா, சமையல்காரர் சுப்பையா, உதவியாளர் சாந்தனு நாயுடு ஆகியோருக்கும் சொத்துக்களை ரத்தன் டாடா எழுதி வைத்துள்ளார்.  விரிவாக படிக்க
  • பட்டியலினத்தவர்களை தாக்கப்பட்ட வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கர்நாடக மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு பட்டியலினத்தவர்களின் குடிசைகள் எரிக்கப்பட்ட வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
  • ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தனது விஸ்வரூபத்தைக் காட்டிய டானா புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது நள்ளிரவு 12.10 மணிக்கு ஒடிசா மாநிலத்தில் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பிதர்கனிகா மற்றும் பத்ரக் மாவட்டத்தில் உள்ள தாம்ரா இடையே கரையைக் கடந்ததாக கூறப்பட்டுள்ளது. விரிவாக படிக்க

உலகம் 

  • காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
  • இஸ்ரேலின் நடத்தும் தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு பதிலடி தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விளையாட்டு

  • இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் புனேவில் முடிவடைந்தது. இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. விரிவாக படிக்க
  • நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு, சில இந்திய வீரர்கள் துலீப் டிராபி மற்றும் இரானி கோப்பை போன்ற உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். ஆனால், ரோஹித் சர்மா, கோலி உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் பங்கேற்கவில்லை. விரிவாக படிக்க

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

Latest News