Evening Digest 26 July 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன? - Tamil News | | TV9 Tamil

Evening Digest 26 July 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

Updated On: 

26 Jul 2024 21:34 PM

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 26 July 2024: இன்றைய டாப் செய்திகள்... உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள்

Follow Us On

தமிழ்நாடு:

  • அமைச்சர் பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. செம்மன் குவாரியில் அளவுக்கு அதிகமாக எடுத்த வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 18 பேர் கைதாகி உள்ளனர்.
  • அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
  • பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: ‘தமிழ் புதல்வன் திட்டம்’… யார் யாருக்கு மாதம் ரூ.1,000.. தமிழக அரசு வெளியிட்ட முக்கியம் அறிவிப்பு

இந்தியா:

  • டெல்லியில் 9வது நிதி ஆயோக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றுக் இக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேச ஆளுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம் தொடர்பாக கேரளா மற்றும் மேற்கு வங்கம் மாநில ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
  • திருத்தப்பட்ட நீட் இளநிலை தேர்வு தரவரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
  • கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அப்போரில் இன்னுயிர் நீத்த ராணுவத்தினருக்கு பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தினார்.
  • இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயற்கை காரணங்கள், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் உயிரிழந்துள்ளதாக அரசு தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகம்:

  • பிலிப்பைன்சில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • விண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பதால் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதற்கு மேலும் தாமதம் ஆகலாம் என நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • இலங்கையில் செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்காக ஆகஸ்ட் 15ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ரனில் விக்கிரவசிங்கே போட்டியிடபோவதாக அறிவித்துள்ளார்.

விளையாட்டு:

  • இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை இரவு 7 மணிக்கு பல்லகெலேவில் தொடங்குகிறது.
  • வரவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடரில் வாசிம் ஜாபரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க பஞ்சாப் அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: 2 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version