5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 26 October 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 26 October 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
முக்கியச் செய்திகள்
umabarkavi-k
Umabarkavi K | Published: 26 Oct 2024 19:43 PM

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ பணிகளை விரைந்து செயல்படுத்துமாறறு அலுவலர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின அறிவுறுத்தியுள்ளார். திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி, ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானில் உள்ள 10 இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

தமிழ்நாடு

  • பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை (அக்டோபர் 27) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விரிவாக படிக்க
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இரண்டு நாட்களுக்கு பயணிகள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. விரிவாக படிக்க
  • பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக்டோபர் 27) நடைபெற உள்ளது. நாளை மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது.  விரிவாக படிக்க
  • தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.  விரிவாக படிக்க 
  • சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ பணிகளை விரைந்து செயல்படுத்துமாறறு அலுவலர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின அறிவுறுத்தியுள்ளார். மேலும், 2ஆம் கட்ட மெட்ரோ பணிக்கு ஒப்புதல் அளித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
  • திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரிவாக படிக்க

இந்தியா

  • கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவின் பேச்சுவார்த்தையாளர்கள் கடந்த சில வாரங்களாக தொடர்பில் இருப்பதாக வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார். விரிவாக படிக்க
  • பரவலாகப் பயன்படுத்தப்படும் கால்சியம் சப்ளிமெண்ட்களான ஷெல்கால் 500 மற்றும் பான் டி உள்ளிட்ட நான்கு மருந்துகளின் மாதிரிகள் போலியானவை என மத்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் கண்டறிந்துள்ளது.  விரிவாக படிக்க
  • தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார். வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் அவர் போட்டியிடும் நிலையில், கடிதம் எழுதியுள்ளார்.
  • காஷ்மீரில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • மகாராஷ்டிரா சட்டப்பேரவை நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில், 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

உலகம்

  • ஈரான் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. ஈரானின் ராணுவ உற்பத்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஈரான் கூறியுள்ளது. விரிவாக படிக்க
  • அக்டோபர் 1ஆம் தேதி, ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானில் உள்ள 10 இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. விரிவாக படிக்க

விளையாட்டு

  •  நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தோல்விக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் மோசமான பேட்டிங்கே காரணம். அதிலும், குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மாவின் பார்ம் கேள்விகுறியாகவே இருக்கிறது.  விரிவாக படிக்க
  • இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி, தற்போது இந்திய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை வென்றது.  விரிவாக படிக்க

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

Latest News