5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 27 July 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 27 July 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
முக்கியச் செய்திகள்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 27 Jul 2024 21:05 PM

தமிழ்நாடு

  • நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடம் கூட வாய்ப்பு அளிக்கவில்லை என மம்தா பானர்ஜி குற்றச்சாட்டியதை அடுத்து, முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை இப்படியா நடத்துவது? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
  • மேற்கு திசை மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  • நீலகிரி முன்னாள் பாஜக எம்.பி. மாஸ்டர் மதன் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
  • மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டாக கூறி திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது.
  • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே 10 வயது சிறுமி உள்பட 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Also Read:  ”ஒரு மாநில முதல்வரை இப்படியா நடத்துவது?” மம்தாவுக்கு ஆதரவாக பேசிய ஸ்டாலின்!

இந்தியா

  • 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே ஒவ்வொரு இந்தியரின் லட்சியம் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
  • ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். தனக்கு 5 நிமிடம் கூட பேச வாய்ப்பளிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.
  • நாட்டிலேயே அதிக யானைகள் கொண்ட மாநிலமாக கர்நாடக மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 283 காட்டு யானைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
  • கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கும் விடுதியில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்த அபிஷேக் என்பவரை போலீசார் மத்திய பிரதேசத்தில் கைது செய்தனர். காதலிக்கு அடைக்கலாம் கொடுத்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.

உலகம் 

  • அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஒவ்வொரு வாக்கையும் பெறுவதற்கு கடுமையாக உழைப்பேன் எனவும் கூறியுள்ளார்.
  • மத்திய காசாவின் டெய்ர் எர்-பலா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இன்று டொனால்டு டிரம்பை அவரது எஸ்டேட்டில் சந்தித்து பேசியுள்ளார். கடைசியாக டிரம்ப் அதிபராக இருந்த சமயத்தில் நேதன்யாகு சந்தித்து இருந்தார்.

விளையாட்டு

  • பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் தனிநபர் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 580 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார் இந்தியா வீராங்கனை மனு பாக்கர். இதனால் அவர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
  • ஒலிம்பிக் 2024ல் முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் 10 மீட்டர் ரைபிள் கலப்பு அணியில் கொரிய ஜோடியை வீழ்த்தி சீனா முதல் தங்க பதக்கத்தை வென்றது. சீனா இதுவரை மொத்தம் 2 பதக்கங்களை வென்றுள்ளது.

Also Read: சென்னையில் நாளை மின்சார ரயில்கள் இயங்குமா? தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

Latest News